15% உயர்வு: பெட்ரோல், டீசல் விலை உச்சம்

15% உயர்வு: பெட்ரோல், டீசல் விலை உச்சம்

2 mins read
b7cf4fc2-9b4a-49c0-9a1b-deebbbbb27dc
-

சிங்­கப்­பூ­ரில் எரி­பொ­ருள் விலை­கள் சாதனை அள­வாக உயர்ந்­துள்­ளன. உலக அள­வில் எண்­ணெய் விலை­கள் மீண்டு வரு­வ­தா­லும் எரி­பொ­ரு­ளுக்­கான தீர்வை உயர்த்­தப்­பட்­ட­தன் விளை­வா­க­வும் இந்த விலை ஏற்­றம் நிகழ்ந்­துள்­ளது.

வியா­ழக்­கி­ழமை பதி­வான ஆக அண்­மைய நில­வ­ரப்­படி, பிர­ப­ல­மான 95-ஆக்­டேன் ரக பெட்­ரோல் லிட்­ட­ருக்கு $2.49என எஸ்­பிசி எண்ெணய் நிரப்பு நிலை­யங்­க­ளி­லும் $2.54 என கால்­டெக்ஸ் மற்­றும் ெஷல் நிலை­யங்­க­ளி­லும் விற்­கப்­பட்­டன. இது கழி­வுக்கு முந்­திய விலை.

அதே­நே­ரம் பெரும்­பா­லான கார்­கள் பயன்­ப­டுத்­தும் 92-ஆக்­டேன் ரக பெட்­ரோல் ஒரு லிட்­டர் $2.47க்கும் $2.50க்கும் இடை­யில் விற்­கப்­பட்­டது. இந்த ரக பெட்­ரோல் கால்­டெக்ஸ், எஸ்ஸோ மற்­றும் எஸ்­பிசி நிலை­யங்­களில் மட்­டும் விற்­கப்­ப­டு­கிறது. ஷெல் நிலை­யங்­களில் விற்­கப்­ப­டு­வ­தில்லை.

98-ஆக்­டேன் ரக பெட்­ரோல் எஸ்­பிசி நிலை­யங்­களில் $2.98 ஆக­வும் ஷெல் நிலை­யங்­களில் $3.02 ஆக­வும் விற்­கப்­பட்­டது.

பிரி­மி­யம் வகைையச் சேர்ந்த 98-ஆக்­டேன் பெட்­ரோல் லிட்­ட­ரின் விலை $3.12க்கும் $3.24க்கும் இடை­யில் இருந்­தது.

பெட்­ரோல் விலை­கள் இவ்­வா­றி­ருக்க, டீசல் விலை­யும் உயர்ந்­துள்­ளது. எஸ்­பிசி எண்­ணெய் நிரப்பு நிலை­யங்­களில் ஒரு லிட்­டர் டீசல் விலை $2.03 ஆக­வும் கால்­டெக்ஸ், ஷெல் நிலை­யங்­களில் $2.06 ஆக­வும் விற்­கப்­பட்­டது.

ஒட்­டு­மொத்­த­மாக இந்த விலை­கள் அனைத்­தும் கடந்த ஆறு மாதங்­களில் 15 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மாக அல்­லது லிட்­ட­ருக்கு 35 காசு­கள் வரை உயர்ந்து இது­வரை இல்­லாத உச்­சத்­தைத் தொட்­டுள்­ளன.

இருப்­பி­னும் கச்சா எண்ெணய் மற்­றும் சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட எரி­பொ­ருள் தயா­ரிப்­பு­க­ளின் விலை­க­ளோடு ஒப்­பி­டும்­போது இந்த உயர்வு கணி­ச­மா­னது.

பிரென்ட் ரக கச்சா எண்ெணய் கடந்த ஆறு மாதங்­களில் பீப்­பாய்க்கு 24 விழுக்­காடு விலை உயர்ந்து 73.50 அமெ­ரிக்க டால­ரைத் தொட்­டுள்­ள­தாக புளூம்­பெர்க் தெரி­வித்­துள்­ளது.

அர­சாங்­கத்­தின் செயல்­பா­டு­க­ளோ­டும் விலை உயர்வு சம்­பந்­த­தப்­பட்டு உள்­ளது.

92 மற்­றும் 95-ஆக்­டேன் ரக பெட்­ரோ­லுக்­கான தீர்வை வரியை கடந்த பிப்­ர­வரி மாதம் லிட்­டர் 10 காசு என அர­சாங்­கம் உயர்த்­தி­யது. அதே­போல 98-ஆக்­டேன் எரி­பொ­ரு­ளுக்­கான தீர்வை 15 காசு உயர்த்­தப்­பட்­டது.

கொள்­ளை­நோய் பர­வல் மிகுந்த கடந்த ஆண்­டில் எண்­ணெய் உற்­பத்­தி­யைக் குறைக்க 'ஓபெக்' எனப்­படும் பெட்­ரோ­ல் ஏற்­று­மதி நாடு­க­ளின் அமைப்பு முடி­வெ­டுத்­த­தைத் தொடர்ந்து கச்சா எண்­ணெய் விலை படிப்­ப­டி­யாக உய­ரத் தொடங்­கி­ய­தாக சிங்­கப்­பூர் எண்­ணெய் தொழில்­துறை ஆலோ­ச­க­ரான ஓங் எங் டோங் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் தெரி­வித்­தார்.