டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு $30 மில்லியன் கூடுதல் நிதி ஆதரவு

ஆகஸ்ட் 31 வரை தினமும் $10; அதன் பின்னர் $5 பெறுவர்

ஆக அண்­மைய கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளின் தாக்­கத்­தைத் தணிக்­கும் பொருட்டு டாக்சி ஓட்­டு­நர்­க­ளுக்­கும் தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­க­ளுக்­கும் செப்டம்பர் இறுதி வரை கூடு­தல் நிதி உதவி அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இரண்­டாம் கட்ட உயர் விழிப்­பு­ நி­லைக் கட்­டுப்­பா­டு­கள் அறி­மு­க­மான ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை­யில் ஒவ்­வொரு ஓட்­டு­ந­ரும் ஒவ்­வொரு வாக­னத்­திற்­கும் நாள் ஒன்­றுக்கு $10 கூடு­த­லா­கப் பெறு­வார்­கள் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

செப்­டம்­பர் மாதத்­தி­லும் உதவி தொட­ரும் என்­ற­போ­தி­லும் அது பாதி­யாக, அதா­வது $5 ஆகக் குறைத்­துத் தரப்­படும்.

மேம்­ப­டுத்­தப்­பட்ட கொவிட்-19 ஓட்­டு­நர் நிவா­ரண நிதிக்கு அர­சாங்­கம் $30 மில்­லி­ய­னைக் கூடு­த­லாக வழங்­கும்.

ஓட்­டு­நர்­கள் தங்­க­ளுக்­கான நிவா­ர­ணத் தொகையை தங்­க­ளின் டாக்சி, தனி­யார் வாடகை கார் நிறு­வ­னங்­கள் மூலம் பெறு­வர். இதற்­காக அவர்­கள் விண்­ணப்­பிக்­கத் தேவை­யில்லை.

புதி­தாக அறி­விக்­கப்­பட்டு இருக்­கும் நிவா­ர­ணத் தொகை தற்­போது ஓட்­டு­நர்­கள் பெற்­று­வ­ரும் நிவா­ர­ணத் தொகை­யில் இரட்­டிப்­பா­கும்.

இதற்கு முன்­னர் ஜூன் மாதத்­திலும் இதேபோன்ற நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஓட்­டு­நர்­கள் ஒவ்­வொரு நாளும் வாக­னம் ஒன்­றுக்கு $10 வீதம் 60 நாள்­க­ளுக்கு நிவா­ர­ணத் தொகை பெறு­வர்.

இம்­மா­தம் தொடங்கி செப்­டம்­பர் வரை $5 நிவா­ர­ணத் தொகை தரப்­படும் என அறி­விக்­கப்­பட்டு இருந்­தது.

டாக்சி மற்­றும் தனி­யார் வாடகை கார் துறை­க­ளுக்கு ஆத­ரவு வழங்க கடந்த ஆண்டு பிப்­ர­வரி முதல் மொத்­தம் $482 நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

ஆகஸ்ட் 18 வரை நடப்­பில் இருக்­கும் இரண்­டாம் கட்ட உயர் விழிப்­பு­நி­லைக் கட்­டுப்­பா­டு­க­ளின் போது டாக்சி மற்­றும் தனி­யார் வாடகை கார்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வோர் எண்­ணிக்கை கணி­ச­மா­கக் குறை­யும் என எதிர்­பார்க்­கப்­

ப­டு­வ­தால் இந்­தக் கூடு­தல் உதவி வழங்­கப்­ப­டு­வ­தாக அது கூறியது.

"மேம்­ப­டுத்­தப்­பட்ட ஓட்­டு­நர் நிவா­ரண நிதித் திட்­டத்தை அமல்

­ப­டுத்த டாக்சி மற்­றும் தனி­யார் வாடகை கார் நிறு­வ­னங்­க­ளு­டன் இைணந்து அடுத்த இரு வாரங்­க­ளுக்கு ஆணை­யம் பணி­யாற்­றும்.

"இந்த நிவா­ரண உத­வி­யைப் பெற்­றுக்­கொண்ட ஓட்­டு­நர்­கள் பற்­றிய விவ­ரங்­களை அந்­நி­று­வ­னங்­கள் உரிய காலத்­தில் தெரி­விக்­கும்," என ஆணை­யம் தனது அறிக்­கை­யில் கூறி­யுள்­ளது.

கொவிட்-19 தொற்­றி­யோ­ரு­டன் அணுக்­கத் தொடர்­பில் இருந்­த­தன் கார­ண­மாக தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்ட ஓட்­டு­நர்­கள் சுகா­தார அமைச்­சின் தனிமை உத்­த­ரவு உத­வித் திட்­டத்­தின் வாயி­லாக தொடர்ந்து உதவி பெறு­வர் என்­றும் அது தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!