3 உணவு, பான கடைகளின் உரிமம் பறிப்பு

3 உணவு, பான கடைகளின் உரிமம் பறிப்பு

1 mins read
492f108f-e783-4eec-b81c-fdfbce59b265
-

பல்வேறு விதிமீறல்கள் காரணமாக மூன்று உணவு பானக் கடைகளின் உரிமம் பறிக்கப்பட்டுள்ளதாக நீடித்த நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்துள்ளது. இவை மூன்றும் இதற்கு முன்னர் இரவுக்கூடங்களாக இருந்து உணவு பானக் கடைகளாக மாற்றம் கண்டவை. சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள த சார்ம், ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள பெடல்ஸ் டூ பப் அண்ட் கஃபேடே ரியா, சிலிகி ரோட்டிலுள்ள ஐகான்-II ஆகிய கடைகள் பாதுகாப்பு நிர்வாக விதி முறைகளை மீறியதற்காக நடவடிக்கைக்கு ஆளான தாக அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வாடிக்கையா ளர்களும் கடை ஊழியர் களும் நேருக்கு நேர் பேசுவதைக் குறைக்க தவறியதற்காகவும் விருந் தோம்பல் சேவைகளை வழங்கியதற்காகவும் விளை யாட்டுகளில் பங்கேற்க சிலரை அனுமதித்ததற்காக வும் இவற்றின் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டன. விதிமீறல்கள் கண்டறியப் பட்டதும் இவற்றின் நட வடிக்கைகள் உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்ட தாகவும் மேலும் 18 உணவு பானக் கடைகளின் பணி கள் 20 நாட்களுக்கு நிறுத்தப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.