செய்திக்கொத்து

தொடர்பில்லாத தொற்றுச் சம்பவங்கள் குறித்து சுகாதார நிபுணர்கள் கருத்து

அண்மை நாட்களாக எவ்விதத் தொடர்புமற்ற கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலைக்கு உரியது என்றும் கிருமி தொற்றியோரிடையிலான தொடர்பு களைக் கண்டறிவதில் சுணக்கம் நிலவுவதை இது பிரிதிபலிப்ப தாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிருமி தொற்றியதாக வெள்ளிக்கிழமை புதிதாக அறிவிக்கப்பட்ட 130 பேரில் 29 பேருக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இதற்கு முன்னர் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட 162 பேரில் 52 பேருக்குத் தொடர்பு இல்லாதது தெரிய வந்தது. எவ்விதத் தொடர்பு இல்லாத வகையில் ஒரே நாளில் ஆக அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது இதுதான். புதன்கிழமை 30 பேர் தொடர்பற்ற முறையில் தொற்றுக்கு ஆளானதாக அறிவிக்கப் பட்டு இருந்தது. இருப்பினும் இவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை மாலை ஒன்பதுக்குக் குறைந்ததாக சுகாதார அமைச்சு அன்றிரவு தெரிவித்தது. புதிதாக தொற்றுக்கு ஆளானோரை அறிவிக்கும் முன்னர் அவர்களின் தொடர்புத் தடங்களை அறியும் திறன் குறைந்திருப்பது அத்தகையோரின் எண்ணிக்கை உயர்வுக்குக் காரணம் என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோய் சுவீ ஹோக் பொது சுகாதாரப் பள்ளியின் முதல்வர் டியோ யிக் யிங் கூறியுள்ளார்.

உரிமமின்றி கேடிவி கூடம் நடத்தியதாகக் குற்றச்சாட்டு

கொவிட்-19 கிருமிப் பரவல் காலத்தில் தொழிற்கூட கட்டடத் தில் உரிமம் பெறாத கேடிவி கூடம் ஒன்றை நடத்தியதாக நேற்று ஆடவர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப் பட்டது. லீ பிங் குயன், 31, எனப்படும் அவர் மீது உரிமம் பெறாமல் பொது கேளிக்கைக்கூடம் நடத்தியதாகவும்

கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழும் குற்றம் சுமத்தப்பட்டன. கேடிவி கூடத்தில் உரிமம் பெறாத மதுபான விநியோகத்தில் ஈடுபட்டதாகவும் மேலும் ஒரு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!