தனியார் வீட்டு விலை ஏற்றம் மெதுவடைந்துள்ளது

சிங்­கப்­பூ­ரில் தனி­யார் வீட்டு விலை­ ஏற்­றம் இந்த ஆண்டின் இரண்­டாம் காலாண்­டில் மெது­வ­டைந்­தது.

தரை வீடு­க­ளின் விலை குறைந்­த­தும் முடுக்­கி­வி­டப்­பட்ட கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் குறை­வான எண்­ணிக்­கை­யில் புதிய தனி­யார் வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­பட்­ட­தும் இதற்­குக் கார­ணம்.

தனி­யார் வீ­டு­க­ளின் விலை சென்ற காலாண்­டில் 0.8 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

இந்த ஆண்டு முதல் காலாண்­டில் விலை 3.3 விழுக்­கா­டும் சென்ற ஆண்டு இறுதி காலாண்­டில் 2.1 விழுக்­கா­டும் அதி­க­ரித்­த­தாக நகர மறுசீர­மைப்பு ஆணை­யத்­தின் புள்ளி விவ­ரங்­கள் தெரி­வித்­தன.

முன்­னோடி மதிப்­பீட்­டின்­படி சென்ற காலாண்­டில் தனி­யார் வீடு­க­ளின் விலை 0.9 விழுக்­காடு அதி­க­ரிக்­கும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் தனி­யார் வீடு­க­ளின் விலை 7.1 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

சென்ற காலாண்­டில் விற்­ப­னை­யான தரை வீடு அல்­லாத புதிய தனி­யார் வீடு­க­ளின் எண்­ணிக்கை 15 விழுக்­காடு குறைந்­தது. எக்­சி­கி­யூ­டிவ் கூட்­டு­ரிமை வீடு­க­ளின் விற்­பனை அதில் அடங்­காது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!