அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் பேசுவார்

அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் பேசுவார்

1 mins read
ac4b5b9f-d869-45f7-9bf2-743a635797b3
-

ரிவர் வேலி ஹை பள்­ளி­யில் நிகழ்ந்த சம்­ப­வம் குறித்து பெற்­றோ­ருக்­கும் சமூ­கத்­தி­ன­ருக்­கும் இருக்­கக்­கூ­டிய அச்­சங்­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­க கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் வரும் வாரம் நாடா­ளு­மன்­றத்­தில் பேசு­வார்.

பள்­ளி­க­ளுக்கு ஆத­ரவு அளிப்பது, உதவி தேவைப்­படும் மாண­வர்­களை எப்­படி கவ­னித்­துக்­கொள்­வது ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் பெற்­றோ­ருக்­கும் சமூ­கத்­தி­ன­ருக்­கும் சில ஐயங்­கள் உள்­ளன.

அவை புரிந்­து­கொள்­ளக்­கூ­டி­யவை எனத் திரு சான் ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டார்.

சவா­லாக இருந்த இந்த வாரத்தை சமூ­கம் ஒன்­று­பட்டு எதிர்­கொண்­டதை அவர் குறிப்­பிட்­டார்.கடந்த திங்கட்கிழமையன்று ரிவர் வேலி ஹை பள்ளியைச் சேர்ந்த 13 வயது மாணவரை கொன்றதாக 16 வயது நிரம்பிய சக பள்ளி மாணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரண்டு மாண­வர்­களும் 18 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள்.

அத­னால் அவர்­க­ளின் பெயர்­க­ளை­யும் அடை­யா­ளத்­தை­யும் வெளி­யி­டத் தடை உள்­ளது.

சம்­ப­வம் நிகழ்ந்­த­போது இதர மாண­வர்­க­ளைப் பாது­காக்க உட­ன­டி­யா­கத் தகுந்த நட­வ­டிக்­கையை எடுத்த பள்­ளி­யின் ஆசி­ரி­யர்­க­ளை­யும் ஊழி­யர்­க­ளை­யும் பாராட்­டி­னார் அமைச்­சர் சான்.

மனநல ஆதரவு தேவைப்பட்டால் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் அல்லது மனநல ஆலோசகர்களை நாடலாம் என்று சிங்கப்பூரில் உள்ள மற்ற பள்ளிகளும் தங்களின் மாணவர்களிடம் கூறியுள்ளன.

சம்பவம் நிகழ்ந்த ரிவர் வேலி ஹை பள்ளியில் 12லிருந்து 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.