ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்

ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்

1 mins read
c6edd3ec-1152-4624-ad08-d423830f3063
-

உயர்த்தப்பட்ட இரண்டாம் கட்ட விழிப்புநிலை நடப்பில் இருப்பதால் ராணுவ உடற்பயிற்சி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ராணுவ முகாம்களில் நடத்தப்படும் பயிற்சிகள், தயார்நிலையில் இருக்கும் தேசிய சேவையாளர்களுக்கான தனிநபர் உடலுறுதிச் சோதனைகள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

தயார்­நி­லை­யில் உள்ள தேசிய சேவை­யா­ளர்­க­ளுக்­கான முகாம் பயிற்­சி­களும் அடுத்த மாதம் 18ம் தேதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன. செயல்­மு­றைக்கு அவ­சி­ய­மான பயிற்­சி­கள் இதற்கு விதி­வி­லக்கு.

எஃப்சிசி எனப்படும் உடலுறுதிச் சோதனைக்காகப் பயிற்சிகளை நடத்தும் ராணுவ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படும்.

ஆனால், மெய்நிகர் வடிவில் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். குறிப்­பிட்ட காலத்­திற்­குள் தனி­ந­பர் உட­லு­று­திச் சோத­னைக்­கான நிபந்­த­னை­களை தேசிய சேவை­யா­ளர்­கள் பூர்த்­தி­செய்­ய­வேண்­டி­யது விதி­முறை. பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு இந்த ஒரு முறை மட்­டும் அந்த நிபந்­தனை அகற்­றப்­ப­டு­கிறது.

நேற்று முன்தினம் சிங்கப்பூரில் மீண்டும் உயர்த்தப்பட்ட இரண்டாம் கட்ட விழிப்புநிலை நடைமுறைப்படுத்தப்பட்டது. முடுக்கிவிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடப்பில் இருக்கும்.