மன்னிப்பு கேட்கமாட்டோம்: டீஓசி ஊடகம்

மன்னிப்பு கேட்கமாட்டோம்: டீஓசி ஊடகம்

1 mins read
0ac79ec7-886e-42fd-9172-e8f9f619b711
-

மாற்­றுக் கருத்து செய்தி நிறு­வ­ன­மான டீஓசி என்­ற­ழைக்­கப்­படும் தி ஓன்­லைன் சிட்­டி­சன், மன்­னிப்பு கேட்­கு­மாறு அதற்கு விடுக்­கப்­பட்ட கோரிக்­கையை நிராகரித்துள்ளது.

மறதி நோய்க்கு ஆளான ஒரு மூதாட்­டியி இடம்­பெற்ற காணொ­ளியை டீஓசி அதன் இணை­யத்­த­ளத்­தில் பதி­வேற்­றம் செய்­தி­ருந்­தது. அதன் தொடர்­பில் மன்­னிப்பு கேட்­கு­மாறு மூதாட்­டி­யின் மகன் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார். கடந்த மே மாதம் ஈஷூ­னில் நிகழ்ந்த ஒரு சம்­ப­வம் காணொ­ளி­யில் இடம்­பெற்­றி­ருந்­தது. அதில் காவல்­து­றை­யி­னர் மூதாட்­டியை தொந்­த­ரவு செய்­த­தாக டீஓசி கூறி­யது. காவல்­து­றை­யி­னர் மற்­றும் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் டீஓ­சி­யின் அந்­தச் செயலை வன்­மை­யா­கக் கண்­டித்­த­னர்.