இளையர் மனநலப் பிரச்சினைக்கு கூடுதல் உதவி வழங்கலாம்: அதிபர் ஹலிமா

மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் இளையர்களுக்கு உதவ பெற்றோர், பள்ளிகள், சமுதாயம் ஆகிய முத்தரப்புக்கும் போதுமான அனுபவம் இல்லை என்று அதிபர் ஹலிமா யாக்கோப் ஃபேஸ்புக் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இளை­யர்­களை நன்கு புரிந்­து­கொண்டு அவர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கக் கூடு­தல் முயற்சி எடுக்­கு­மாறும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

மன­ந­லப் பிரச்­சி­னைக்கு ஆளா­கும் பெரி­யோ­ரை­விட இளை­யர்­கள்­தான் மிக மோச­மாக பாதிக்­கப்­ப­டு­வர் என்­ப­தைத் திரு­வாட்டி ஹலிமா குறிப்­பிட்­டார்.

கடந்த திங்கட்கிழமையன்று ரிவர் வேலி ஹை பள்ளியில் 16 வயது மாணவர் ஒருவர் 13 வயது மாணவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுவதையொட்டி அதிபர் இதைச் சட்டினார்.

தற்­கொலை முயற்­சிக்­கா­கக் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட 16 வயது மாண­வர், மன­நல சிகிச்சை பெற ஈராண்­டுக்கு முன் தேசிய மன­ந­லகக் கழ­கத்­திற்கு அனுப்­பப்­பட்­டது நீதி­மன்ற விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

ஒரு­வர் தற்­கொலை முயற்சி மேற்­கொண்­டால் அவர் உதவி கேட்டு கத­று­கி­றார் எனப் பொருள் என்­றார் அதி­பர்.

சம்­பந்­தப்­பட்ட மாண­வர் தற்­கொலை செய்­து­கொள்ள முயற்சி செய்த பிறகு தொடர்ந்து மன­நல சிகிச்சை பெற்­றாரா அல்­லது அதன் தொடர்­பில் மருந்து உட்­கொண்­டாரா போன்ற விவ­ரங்­கள் தெரி­ய­வில்லை என்று அவர் சொன்­னார்.

அவ­ரின் நிலை­மைக்­குக் கார­ணம் பள்ளி விவ­கா­ரங்­களா அல்­லது அவ­ருக்கு வேறே­தும் பிரச்­சினை இருந்­ததா என்­ப­தும் தெரி­ய­வில்லை.

மன­ந­லப் பிரச்­சினை ஏற்­பட பல்­வேறு கார­ணங்­கள் இருக்­க­லாம் எனத் திரு­வாட்டி ஹலிமா சுட்­டி­னார்.

பெற்­றோர், பள்­ளி­கள், சமு­தா­யம் ஆகிய முத்­த­ரப்­புக்­கும் இந்­தச் சிக்­கலை சரி­வ­ரக் கையா­ளத் தெரி­ய­வில்லை என்­பது மட்­டும் தெளி­வா­கத் தெரி­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.

வள­ரும்­போது உடல் ரீதி­யாக ஏற்­படும் மாற்­றங்­க­ளால் சிறு­வர்­கள் தவ­றாக நடந்­து­கொள்ள வாய்ப்­புள்­ளது.

அது பெற்­றோர் புரிந்­து­கொள்­ளா­மல் இருக்­கக்­கூ­டும்.

ஏற்­கெ­னவே வேலை­யில் மூழ்­கி­யி­ருக்­கும் ஆசி­ரி­யர்­க­ளால் தனிப்­பட்ட முறை­யில் ஒவ்­வொரு மாண­வ­ரும் எதிர்­நொக்­கும் சவால்­க­ளைப் புரிந்­து­கொள்ள முடி­யா­மல் போக­லாம். சமு­தா­ய­மும் இளை­யர்­கள் மீது, அதி­லும் குறிப்­பாக கல்­வி­யில் சிறந்து விளங்­கும் மாண­வர்­கள் மீது, அள­வுக்கு அதி­க­மான எதிர்­பார்ப்­பு­களை வைக்­கிறது என்­றார் அதி­பர் ஹலிமா.

மன­ந­லப் பிரச்­சினை என்­றால் எதிர்­ம­றை­யான விளை­வு­க­ளைச் சந்­திக்க நேரி­ட­லாம் எனப் பெற்­றோ­ரி­டையே இருக்­கக்­கூ­டிய மனப்­போக்கு போன்ற சிக்­கல்­க­ளை­யும் திரு­வாட்டி ஹலிமா குறிப்­பிட்­டார். மன­ந­லப் பிரச்­சி­னை­யைப் பற்றி சமுாயத்­தில் இன்­ன­மும் தவ­றான கண்ணோட்டம் இருப்பதையும் அவர் எடுத்­துச் சொன்­னார்.

மன­ந­லப் பிரச்­சி­னை­கள் உள்ள மாண­வர்­க­ளுக்கு உதவ பள்­ளி­களுக்­குக் கூடு­தல் வளங்­களும் ஆத­ர­வும் தேவை என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!