கடந்த திங்கட்கிழமையன்று கொல்லப்பட்ட ரிவர் வேலி ஹை பள்ளி மாணவருக்காக 10 சமயத் தலைவர்களுடன் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டார் பிரதமர் அலுவலக அமைச்சரும், கல்வி, வெளியறவு அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சருமான மாலிக்கி ஓஸ்மான்.
இந்த 10 சமயத் தலைவர்களும் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள்.
கூட்டுப் பிரார்த்தனைக்கு சமய நல்லிணக்க அமைப்பு ஏற்பாடு செய்தது.
பயம், சுயநலம், பிற இனத்தவருக்கு எதிராக இருக்கக்கூடிய வெறுப்பு, போன்ற உணர்வுகளை அடியோடு மறுக்குமாறு திரு மாலிக்கி சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.
இனங்களுக்கு எதிரான வெறுப்பு, மனித இனத்திற்கும் சமுதாயத்திற்கும் கொவிட்-19 கிருமிப் பரவலைவிட ஆபத்து விளைவிக்கக்கூடிய மிக மோசமான கிருமி என்று அவர் சுட்டினார்.
பெளத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ, சீக்கிய, யூத சமயங்கள் உள்ளிட்ட சமயங்களைச் சேர்ந்த தலைவர்கள் நேற்று நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மாண்ட 13 வயது மாணவரின் உடல் நேற்று முன்தினம் எரி யூட்டப்பட்டது.

