முழு ஆண்டு பணவீக்க முன்னுரைப்பு உயர்த்தப்பட்டது

சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் ஒட்டு­மொத்த பண­வீக்­கத்­திற்­கான தங்­க­ளது முழு ஆண்டு முன்­னு­ரைப்பை 1 விழுக்­காட்­டிற்­கும் 2 விழுக்­காட்­டிற்­கும் இடையே உயர்த்­தி­யுள்­ளன.

முன்­ன­தாக இது 0.5 விழுக்­காட்­டிற்­கும் 1.5 விழுக்­காட்­டிற்­கும் இடைப்பட்டு இருந்­தது.

மூலா­தா­ரப் பண­வீக்­கத்­திற்­கான முன்­னு­ரைப்­பில் மாற்­றம் எது­வும் செய்­யப்­ப­ட­வில்லை. அது 0 விழுக்­காட்­டிற்­கும் 1 விழுக்­காட்­டிற்­கும் இடைப்­பட்­டி­ருக்­கிறது.

கடந்த ஜூன் மாதம் ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் 2.4 விழுக்­கா­டாக ஏழு ஆண்­டு­களில் காணப்­ப­டாத உச்­சத்­தில் எட்­டி­யதை ஆக அண்­மைய மாதாந்­திர பய­னீட்­டா­ளர் விலை தரவு காட்­டி­ய­தைத் தொடர்ந்து இந்த அறி­விப்பு வெளி­வந்­துள்­ளது. பய­னீட்­டா­ளர் விலை­கள் தொடர்ந்து ஆறு மாதங்­க­ளாக ஏறு­மு­கம் கண்­டுள்­ளன.

தனி­யார் போக்­கு­வ­ரத்து மற்­றும் தங்­கு­மி­டச் செல­வு­க­ளின் அதி­க­ரிப்பு, சில்­லறை மற்­றும் இதர பொருட்­க­ளின் விலை சரி­வைப் பர­வ­லாக ஈடு­செய்­த­தாக நாணய ஆணை­ய­மும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்கை தெரி­வித்­தது.

எனி­னும், மூலா­தா­ரப் பண­வீக்­கம் கடந்த மாதம் 0.6 விழுக்­கா­டாக சற்று குறைந்­தது. மே மாதம் அது 0.8 விழுக்­கா­டாக இருந்­தது. சில்­லறை மற்­றும் இதர பொருட்­களின் விலை சரிவே இதற்­குக் கார­ணம்.

எதிர்­வ­ரும் காலாண்­டு­களில் சிங்­கப்­பூ­ரில் மூலா­தா­ரப் பண­வீக்­கம் தொடர்ந்து படிப்­ப­டி­யாக உய­ரும். எனி­னும், இரண்­டாம் கட்ட (உயர்த்­தப்­பட்ட விழிப்­பு­நிலை) நடை­மு­றை­யின்­கீழ் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ள­தால் பண­வீக்க உயர்வு சற்று மெது­வ­டை­யும் என்று கூட்­ட­றிக்கை தெரி­வித்­தது.

இவ்­வாண்டு இறு­தி­வாக்­கில் மொத்த பண­வீக்­கம் தணி­யும் என்று நாணய ஆணை­ய­மும் அமைச்­சும் முன்­னு­ரைத்­துள்­ளன.

கார்­கள், வாடகை தங்­கு­மிட வச­திக்­கான தேவை வலு­வாக இருப்­ப­தால் தனி­யார் போக்­கு­வ­ரத்து மற்­றும் தங்­கு­மி­டச் செல­வு­கள் தொடர்ந்து மீட்­சி­யு­டன் இருக்­கும்.

கார் விலை­கள் அதி­க­ரித்து வந்­த­தன் கார­ண­மாக தனி­யார் போக்­கு­வ­ரத்து பண­வீக்­கம் ஆண்டு அடிப்­ப­டை­யில் கடந்த மாதம் 14.9 விழுக்­காடு உயர்ந்­தது.

தங்­கு­மிட பண­வீக்­கம் ஆண்டு அடிப்­ப­டை­யில் கடந்த மாதம் 1.1 விழுக்­காடு அதி­க­ரித்­தது. வாடகை வீட்­டுச் செலவு உயர்ந்­ததே அதற்­குக் கார­ணம்.

இதற்­கி­டையே, சில்­லறை மற்­றும் இதர பொருட்­க­ளின் விலை ஆண்டு அடிப்­ப­டை­யில் கடந்த மாதம் 1.8 விழுக்­காடு குறைந்­தது. துணி­ம­ணி­கள், கால­ணி­க­ளின் விலை குறைந்­ததே அதற்­குக் கார­ணம்.

மின்­சார, எரி­வாயு செல­வி­னங்­கள் 1.8 விழுக்­காடு குறைந்­தன.

மொத்த பண­வீக்­கம் 1.5% உயர்வு

கார்­கள், உணவு, பெட்­ரோல், தங்கு­மி­டம், துணைப்­பாட வகுப்­பு­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்கு இவ்­வாண்­டின் முதல் பாதி­யில் குடும்­பங்­கள் கூடு­த­லாக பணம் செல­வ­ழிக்க வேண்­டி­யி­ருந்­தது. ஆண்டு அடிப்­ப­டை­யில் மொத்த பண­வீக்­கம் 1.5 விழுக்­காடு கூடி­யதே அதற்­குக் கார­ணம்.

புள்­ளி­வி­வ­ரத் துறை நேற்று இந்­தத் தக­வலை வெளி­யிட்­டது.

குடும்ப வரு­மா­னத்­தைப் பொறுத்­த­வரை, கடை­நிலை 20 விழுக்­காட்­டி­ன­ருக்­கான பண­வீக்­கம் ஆண்டு அடிப்­ப­டை­யில் 0.9 விழுக்­காடு அதி­க­ரித்­தது. நடு­நிலை 60 விழுக்­காட்­டி­ன­ருக்­கான பண­வீக்­கம் 1.4 விழுக்­கா­டா­க­வும் மேல்­நிலை 20 விழுக்­காட்­டி­ன­ருக்­கான பண­வீக்­கம் 1.9 விழுக்­கா­டா­க­வும் உயர்ந்­தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!