மின்னிலக்கத் திறன்களை மேம்படுத்த உதவும் இரு புதிய பாடப்பிரிவுகள்

மின்னிலக்கத் திறன்களை மேம்படுத்த உதவும் இரு புதிய பாடப்பிரிவுகள்

2 mins read
61d82cd3-790e-4931-982f-4836faf1ae9f
வெஸ்ட்கேட் கடைத்தொகுதியில் நடைபெறும் வேலை, திறன் காட்சியை கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் (வலது) பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தங்­க­ளது மின்­னி­லக்­கத் திறன்­களை மேம்­ப­டுத்­து­வ­து­டன் தொழில்­நுட்ப, கட்­ட­டச் சூழல் தொழில்­துறை­களில் வேலை­யில் சேர விரும்­பு­வோர் இரு புதிய பாடப்­பி­ரி­வு­களில் சேர முடி­யும்.

எஸ்­ஜி­யு­னை­டெட் வேலை, திறன் தொகுப்­புத் திட்­டத்­தின்­கீழ் ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்பு இரு பாடப்­பி­ரி­வு­களை வழங்­க­வி­ருக்­கிறது. தொழில்­துறைக்கு ஏற்­பு­டைய பயிற்சி வாய்ப்­பு­களை ஊழி­யர்­க­ளுக்கு இந்­தப் பாடப்­பி­ரி­வு­கள் வழங்­கும் என்று அந்த அமைப்பு நேற்று தெரி­வித்­தது. சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­காக வேலை வாய்ப்­பு­க­ளை­யும் திறன் பயிற்­சி­யை­யும் வழங்க இந்­தத் தொகுப்­புத் திட்­டம் கடந்த ஆண்டு தொடங்­கப்­பட்­டது.

தொழில்­நுட்ப, மின் வணிக துறை­களில் உள்ள வெளி­நாட்டு நிறு­வ­னங்­களில் மூன்று மாத­கால தொழிற்­ப­யிற்­சி­யி­லும் பங்­கேற்­பா­ளர்­கள் ஈடு­ப­டு­வர்.

இத்­த­கைய வேலைப் பயிற்­சி­கள் மூலம் சட்ட விவ­கா­ரங்­கள், தரவு ஆளுமை உள்­ளிட்ட அம்­சங்­களில் அனைத்­து­ல­க­மய திறன்­க­ளைப் பெறு­வ­து­டன் பங்­கேற்­பா­ளர்­கள் தங்­க­ளது அடித்­த­ளத்­தை­யும் வலுப்­படுத்த முடி­யும்.

தொழிற்­ப­யிற்­சியை முடித்­த­வு­டன் அதே நிறு­வ­னத்­தில் அவர்­க­ளுக்கு வேலை வழங்­கப்­ப­ட­லாம்.

இந்­தப் பாடப்­பி­ரி­வின் மூலம் வேலை தேடும் பணி­யி­டைக்­கால ஊழி­யர்­கள் 50 பேர் வரை பலன்­பெ­று­வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மானி­யங்­கள் போக இந்­தப் பாடப்­பி­ரி­வு­க­ளுக்கு ஆகும் செலவு $500. பங்­கேற்­பா­ளர்­கள் தங்­க­ளு­டைய ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் உத­வித்­தொ­கை­யைக் கொண்டு இதற்­குக் கட்­ட­ணம் செலுத்­த­லாம். அவர்­களுக்கு மாதாந்­திர பயிற்சி படித்­தொ­கை­யாக $1,200 வழங்­கப்­படும்.

ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் மாதத்­தின் ஒரு பகு­தி­யாக வெஸ்ட்­கேட் கடைத்­தொ­கு­தி­யில் நடை­பெ­றும் வேலை, திறன் காட்­சியை கல்வி, மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங் நேற்று பார்­வை­யிட்­டார்.

இந்த ஐந்து நாள் நிகழ்வு வரும் செவ்­வாய்க்­கி­ழமை நிறை­வு­பெ­று­கிறது. வாழ்க்­கைத்­தொ­ழில் ஆலோ­சனை, நேர்­மு­கத் தேர்வு, இணையக் கருத்­த­ரங்­கு­கள் என மெய்­நி­கர் வழி­யா­க­வும் நேருக்கு நேரும் நிகழ்ச்­சி­கள் இதில் இடம்­பெ­று­கின்­றன.