முறைகேடு: சட்ட நிறுவன முன்னாள் ஊழியருக்குச் சிறை

சட்ட நிறு­வ­னம் ஒன்­றில் பணி­யாற்­றிய முன்­னாள் வர­வேற்­பா­ளர் ஒரு­வர், தமக்கு இருந்த அதி­கா­ரத்தை தவ­றா­கப் பயன்­ப­டுத்தி மூன்று ஆண்­டு­களில் கட்­சிக்­கா­ரர்­க­ளி­ட­ம் இருந்து $140,000க்கும் மேலான தொகையை தவறாக கையாண்டார்.

நூர்­ஃபர்­ஹானா சஸ்­வானி அப்­துல் சமத் எனும் அந்த 27 வயது பெண்­ணுக்கு நேற்று ஓராண்டு 11 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

நம்­பிக்கை மோசடி செய்­த­தாக தம்­மீது சுமத்­தட்ட குற்­றச்­சாட்டை முன்­ன­தாக அவர் ஒப்­புக்­கொண்­டார்.

2013 முதல் 2019 ஜூலை 31ஆம் தேதி­வரை 'கெல்கோ' சட்ட நிறு­வ­னத்­தில் நூர்­ஃபர்­ஹானா பணி­யாற்­றி­ய­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் குறிப்­பிட்­டன.

குற்­ற­வி­யல் வழக்­கு­க­ளுக்­காக கட்­சிக்­கா­ரர்­க­ளி­ட­மி­ருந்து கட்­ட­ணம் வசூ­லிப்­பது, சட்­டச் சேவைக்­கான விலைப் பட்­டி­யலை தயார்­செய்­வது, கட்­சிக்­கா­ரர்­க­ளின் சந்­தே­கங்­க­ளுக்­குப் பதில் அளிப்­பது உள்­ளிட்­டவை அவரது கட­மை­களில் அடங்­கும்.

2016 ஆகஸ்ட்­டிற்­கும் 2019 ஜூலைக்­கும் இடைப்­பட்ட மூன்று ஆண்டு காலத்­தில் 201 பரி­வர்த்­த­னை­களில் கட்­சிக்­கா­ரர்­க­ளி­ட­ம் இருந்து பெற்ற ரொக்­கத்­தைக் கையாண்­டு முறை­கேட்டில் ஈடுபட்டார்.

நூர்­ஃபர்­ஹானா மொத்தம் $148,290ஐ முறை­கே­டாக கையாண்­ட­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் குறிப்­பிட்­டன.

துணி­ம­ணி­கள், மளி­கைப் பொருட்­கள் வாங்­கு­வது உள்­ளிட்ட தனிப்­பட்­ட செல­வு­க­ளுக்கு அந்­தப் பணத்­தைப் பயன்­ப­டுத்­தி­யதை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!