ஃபேர்பிரைஸ் கடைகளில் மூத்தோருக்காக பொருட்கள் வாங்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு 3% விலைக் கழிவு

ஃபேர்பிரைஸ் கடைகளில் மூத்தோருக்காக பொருட்கள் வாங்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு 3% விலைக் கழிவு

2 mins read
d12ccfbe-7246-4d7c-b252-a630b38db73d
-

முன்­னோ­டித் தலை­முறை உறுப்­பி­னர் அட்­டை­களை வைத்­தி­ருப்­போர் சார்­பில் அவர்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்­கள் ஃபேர்பி­ரைஸ் பேரங்­கா­டி­களில் பொருட்­கள் வாங்கி விலைக் கழிவு பெற­லாம் என்று ஃபேர்பி­ரைஸ் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

தற்­போ­தைய கொவிட்-19 சூழ­லில் மூத்­தோர் வீட்­டி­லேயே இருப்­பதை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் இந்த ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கிறது.

மூன்று விழுக்­காடு விலைக் கழி­வைப் பெற, ஃபேர்பி­ரைஸ் அல்­லது யூனிட்டி கடை­களில் வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளது குடும்ப உறுப்­பி­ன­ரின் முன்­னோ­டித் தலை­முறை அட்­டை­யைக் காட்ட வேண்­டும்.

திங்­கட்­கி­ழ­மை­க­ளி­லும் புதன்­கி­ழ­மை­க­ளி­லும் இந்த விலைக் கழிவு பொருந்­தும்.

வரும் திங்­கட்­கி­ழமை முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தங்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்­கள் சார்­பில் பொருட்­கள் வாங்கி இந்த விலைக் கழி­வைப் பெற­லாம்.

ஜூரோங் மீன்­பி­டித் துறை­முக கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டைய பல்­வேறு ஈரச்­சந்­தை­களில் பல­ரி­டம் கொவிட்-19 தொற்று கண்­ட­றி­யப்­பட்­டது.

இன்­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத மூத்­தோர் தற்­போ­தைய சூழ­லில் முடிந்­த­வரை வீட்­டி­லேயே இருக்­கு­மாறு கிரு­மித்­தொற்றை எதிர்­கொள்­ளும் அமைக்­சு­கள்­நிலைப் பணிக்குழு அண்­மை­யில் அறி­வு­றுத்­தி­யி­ருந்­தது.

"எழு­பது வய­துக்கு மேற்­பட்ட மூத்­தோர் பலர் இன்­ன­மும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தது எங்­க­ளுக்­குக் கவ­லைக்­கு­ரி­ய­தாக உள்­ளது," என்று ஃபேர்பி­ரைஸ் குழு­மத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி சியா கியன் பெங் கூறி­னார்.

"மூத்­தோ­ருக்­குப் பணத்தை மிச்­சப்­ப­டுத்த உத­வு­வ­தற்கு அப்­பாற்­பட்டு, தனி­யாக வசிக்­கும் மூத்­தோ­ரைச் சென்று பார்த்து அவர்­களுக்கு குடும்ப உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு வழங்­கு­வதை இத்­திட்­டம் ஊக்­கு­விக்­கிறது," என்­றும் அவர் சொன்­னார்.

நாள் ஒன்­றுக்கு ஒரே பரி­வர்த்­த­னை­யில் $200 வரை பொருட்­கள் வாங்­கும்­போது இந்த 3 விழுக்­காடு விலைக் கழிவு பொருந்­தும் என்று ஃபேர்பி­ரைஸ் நிறுவனம் தெரி­வித்­தது.