முகக்கவசம் அணிய மறுத்த மாதுக்கு பிணை ரத்து

முகக்கவசம் அணிய மறுத்த மாதுக்கு பிணை ரத்து

1 mins read
114e0891-0604-4e41-9402-149ecf206886
-

முகக்கவசம் அணிய மறுத்த மாதுக்கு வழங்கப்பட்ட பிணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பல நேரங்களில் முகக்கவசம் அணிய மறுத்ததாக 53 வயது ஃபூன் சியூ யோக் மீது ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், இதுதொடர்பாக அவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் மாண்டரின் ஆர்ச்சர்ட் சிங்கப்பூர் ஹோட்டலில் அவர் முகக்கவசம் அணியாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த $12,000 பிணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அவரது வழக்கு தொடர்பான வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது.

ஃபூன் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக மொத்தம் 22 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.

குறிப்புச் சொற்கள்
முகக்கவசம்பிணை