சீனர், மலாய், இந்தியர், மற்றவர்கள் வகைப்பாடு-சிறுபான்மைச் சமூகங்களுக்குப் பலன்

சிங்கப்பூரில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் சென்ற வாரம் இன நல்லிணக்க நாளைக் கடைப்பிடித்தனர். இங்கு பரிணமித்து வரும் இன உறவு சவாலை ஒரு சமூகமாக நாம் சமாளிப்பதற்கான அடுத்த முயற்சி என்ன என்பதைப் பற்றி பரிசீலிக்க இது தக்க தருணம். சூழ்நிலைகள் மாறுகின்றன. இது முக்கியமானதாக ஆகி இருக்கிறது.

இந்த நிலையில் நாம் தட்டுத்தடுமாறி சமூகத்தைப் பிளவுபடுத்தும் வழியில் இறங்கிவிடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டி இருக்கிறது. இனம், சமயம் பற்றிய விவாதிப்புகள் முன்பைவிட காரசாரமாக நடக்கின்றன.

அண்மையில் நிகழ்ந்துள்ள இனவாதச் சம்பவங்கள், இனம் என்பது நாம் கவனம் செலுத்தவேண்டிய முக்கியமான ஒன்று என்பதை வெளிப்படைக எடுத்துக் காட்டுகின்றன. இனம் நம்மை இணைக்கிறதா பிரிக்கிறதா என்பது, சிங்கப்பூரர்கள் ஒருவர் மற்றொருவரை எந்த அளவுக்கு ஆழமாக புரிந்து கொள்கிறார்கள், எந்த அளவுக்கு மரிதை கொடுத்து நடந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கும்.

பல இன சமூகத்தில் ஏற்படக்கூடிய அத்தகைய அலைகளையும் சுழல்களையும் சமாளித்து நாம் எப்படி கரை ஏறப்போகிறோம் என்பது, கடந்த காலத்தில் நமக்கு வழிகாட்டியாக இருந்துள்ள ஏற்பாடுகளையே சார்ந்து இருக்கும். அந்த ஏற்பாடு நமக்கு நல்ல பலன்களை அளித்துள்ளதா?

சிங்கப்பூரர்களை பிறப்பை வைத்து சீனர், மலாய்க்காரர், இந்தியர், மற்றவர்கள் என்று நான்கு பெரிய பிரிவுகளில் வகைப்படுத்துவது அத்தகைய ஏற்பாட்டில் ஒன்று.

நிர்வாக ரீதியில் இது பயனுள்ள ஒன்று என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், இத்தகைய இன அடிப்படையிலான வகைப்பாட்டு முறையை இந்த நவீன காலகட்டத்தில் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்; அல்லது ஒரே முடிவாக அவற்றை ஒதுக்கி வைத்துவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அத்தகைய வகைப்பாட்டை கைவிட்டுவிட்டால் நாம் சக சிங்கப்பூரர்களை பார்க்கும் இன அடிப்படையிலான கண்ணோட்டம் அகன்றுவிடும் என்று அப்படி குரல் கொடுப்பவர்கள் வாதிடுகிறார்கள்.

சீனர்கள் அதிகமாக இருக்கும் ஒரு சமூகத்தில் அத்தகைய ஓர் ஏற்பாடு அனைத்து சமூகங்களுக்குமே முக்கியமானதாக இருக்கிறது. அதேவேளையில், சிறுபான்மையினருக்கு அது மேலும் முக்கியமானதாக உள்ளது.

அதாவது ஒவ்வொரு சமூகத்திற்கும் அந்த ஏற்பாட்டின் மூலம் அதிகாரபூர்வ அங்கீகாரத்திற்கான உத்திரவாதம் கிடைக்கிறது. நம்முடைய சிங்கப்பூர் அடைளத்தின் அடிப்படை பல இனத்தன்மை என்பதை அந்த ஏற்பாடு உறுதிப்படுத்துகிறது.

இது ஒருபுறம் இருக்கையில், சீனர், மலாய், இந்தியர், மற்றவர்கள் என்ற வகைப்பாட்டைக் கைவிட்டுவிட்டால் சிங்கப்பூரின் பூர்வ குடிமக்கள் என்ற சிறப்பு நிலையை மலாய்க்காரர்கள் பெற்றிருப்பதன் தொடர்பில் கேள்விகள் எழும்பிவிடும்.

சிங்கப்பூர் அரசமைப்புச் சட்டத்தின் 152வது அம்சம் இந்தச் சிறப்பு நிலைக்கு வழி அமைக்கிறது. சிங்கப்பூரில் சிறுபான்மை இனத்தவர்களின் இன, சமய நலன்களைத் தொடர்ந்து பராமரித்து வரும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது என்பதை இந்த அம்சம் உறுதிப்படுத்துகிறது. இன்னும் சிறப்பாக, அந்தச் சமூகங்களின் அரசியல் கல்வி, சமயம், பொருளியல், சமூகம், கலாசார நலன்களையும் மலாய் மொழியையும் பாதுகாப்பது, ஆதரிப்பது, பேணி வளர்ப்பது, மேம்படுத்துவது ஆகியவற்றையும் அந்த அம்சம் உறுதிப்படுத்துகிறது.

அத்தகைய ஏற்பாட்டை நாம் கைவிட்டுவிட்டால் சிறுபான்மை சமூகத்தினரிடையே மனசங்கடம் ஏற்படும்.

தங்களுக்கே உரிய தனிப்பட்ட அடை ளங்கள் மறைந்து போய்விடலாம்; முதலும் முடிவுமாக பெரும்பான்மை சமூகத்துடன் கலந்துவிடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும் என்று சிறுபான்மை சமூகத்தினரிடையே கவலை எழக்கூடும்.

ஓர் இன மக்களிடம் காணப்படும் தனி அடைளம் மற்றும் பாதுகாப்பு உணர்வு என்பது, அவர்கள் தங்கள் சொந்த வரலாற்றை, சொந்த வேர்களை எந்த அளவுக்கு இறுக்கமாகப் பற்றிக்கொள்கிறார்கள் என்பதையே அடிப்படைகக் கொண்டிருக்கும். இன உறவுகளைப் பலப்படுத்த முயற்சி செய்யும் நாம் இதை நினைவில் கொள்ள வேண்டியது மிக முக்கியமானது.

குடியேறிய சமூகங்களைக் கொண்ட ஒரு நாட்டில், வலுவாக நிர்மாணிக்கப்பட்ட குடிமை அடைளம் நன்கு நிலைபெற மேலும் பல தலைமுறைகள் பிடிக்கும். எளிமைகக் கூறவேண்டுமானால் சிங்கப்பூரர்களின் பலதரப்பட்ட அடைளங்களும் கட்டிக்காக்கப்பட வேண்டும்.

குறிப்பாக பொது என்று வரும்போது சிங்கப்பூரர் என்ற உணர்வு நம்முடைய அடிப்படை அடைளமாக இருக்க வேண்டிய அதே நேரத்தில், இன, சமய, கலாசார, மொழி ரீதியிலான அடைளங்கள் இரண்டாம் நிலை அடைளங்களாக எப்போதுமே பகிரங்கமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த வழியில்தான் நாம் பன்மயச் சமூகமாக செழித்தோங்கி இருக்கிறோம், செழித்தோங்குவோம்.

இன உறவுகளைச் சமாளித்தல்

ஓர் இளம் நாட்டில் நம்முடைய இரண்டாம் நிலை அடைளங்களின் முக்கியத்துவத்தைவிட சிங்கப்பூரர்கள் என்ற பரந்த அளவிலான தேசிய அடையாளத்தை முதன்மையானதாக ஆக்கும் முயற்சிகள் போதவில்லை என்ற கவலை நிலவுகிறது.

இனவாதமும் பாரபட்சமும் இன்னமும் இருக்கிறது என்பதும் அது அதிகரித்திருக்கக்கூடும் என்ற நிலையும் நிச்சயமாக கவலை தரும் ஒன்று.

இனவாதிகள் வேறுபாடுகளை அடிக்கடி பலப்படுத்தியும் வருகிறார்கள். இந்த நேரத்தில் அவர்களின் முக்கியத்துவத்தைக் குறைக்க முடியும். குறைத்தாக வேண்டும். சமூகங்களுக்கு இடைப்பட்ட இடைவெளியை நாம் அளவுக்கு அதிகமாக பெரிது படுத்தக்கூடாது.

அதேபோல, அடிப்படை உண்மை நிலவரங்களின் நுணுக்கங்களை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. இவை பொருள் பொதிந்த கலந்துரைடல்களுக்கு அடிப்படைனவை. புரிந்துணர்வுக்கு வழிகோலுபவை.

சமூகம் பரிணமித்து வரும் காலகட்டத்தில், இனம், மொழி, சமயம் ஆகியவை பற்றிய விவாதிப்புகளின் எல்லைகளை வகுப்பதும் தீர்மானிப்பதும் மற்றொரு சவால். இன, சமய பிரச்சினைகள் பற்றி பகிரங்கமாக விவாதிக்க இளம் சிங்கப்பூரர்கள் விரும்புகிறார்கள்.

வெவ்வேறான இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய தேர்வுகளில் எந்த அளவுக்கு சாதனை புரிந்து இருக்கிறார்கள் என்பதைப் பற்றிய வருடாந்திர புள்ளி விவரங்களையும் 10 ஆண்டு போக்குகளையும் பகிரங்கமாக வெளியிடுவதில்லை என்று கல்வி அமைச்சு முடிவு செய்து இருக்கிறது.

ஒவ்வொரு சமூகத்தின் கல்விச் செயல்திறனை மேம்படுத்துவதற்காக அத்தகைய புள்ளிவிவரங்கள் இன்னமும் அநேகமாக தொகுக்கப்பட்டுப் பகுத்து ஆராயப்படும்.

இருந்தாலும் அவை எப்படி வெளியிடப்படுகின்றன, பயன்படுத்தப்படுகின்றன என்பது, குறிப்பாக சிறுபான்மை சமூகங்களுக்கு உதவலாம் அல்லது ஓர் இனம் என்றால் இப்படித்தான் என்ற முத்திரையையும் அவை குத்தக்கூடும்.

ஏறத்தாழ 56 ஆண்டு காலம் நல்ல முன்னேற்றம் கண்டு வந்திருக்கும் சிங்கப் பூர், இன பிரச்சினைகள் பற்றி மேலும் துடிப்புமிக்க விவாதிப்புகளை பாதுகாப்புடன் கூடிய நம்பிக்கையுடன் தொடர முடியும்.

இத்தகைய கலந்துரைடல் மூலமாகவும் பொருள்பொதிந்த ஈடுபாட்டின் விளைவாக வும் நாம் ர் என்பதைப் பற்றி இன்னும் வலுவான உணர்வு நமக்கு ஏற்படும்.

நம்முடைய வேறுபாடுகள் பற்றிய நுணுக்கமான புரிந்துணர்வு உருவாகும்.

நம்முடைய பலதரப்பட்ட அடைளங் களை ஒருங்கிணைக்கும் சிங்கப்பூர் அடை ளத்தையும் நியதிகளையும் பலப்படுத்து வதற்கு என்னென்ன தேவை என்பதை நாம் இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ள லாம்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தின் யோங் பங் ஹாங் சட்டப் பள்ளியின் இணைப் பேராசிரியர் இயூஜின் டான்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!