பதினாறு கொவிட்-19 விரைவு பரிசோதனை நிலையங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மாதத்திற்கு முன்னதாக இது அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் மேலும் நான்கு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு நிலையத்திலும் 400 பேர் முதல் 1,000 பேர் வரை சோதிக்கப்படலாம் என்று சுகாதார மேம்பாட்டுக் கழகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தது. குறைந்தது 6,400 சோதனைகள் இந்த நிலையத்தில் நடைபெற உள்ளன.
ஜூன் 21ஆம் தேதிக்கும் கடந்த புதன்கிழமைக்கும் இடையே சுமார் 13, 900 சோதனைகள் இந்த 16 நிலையங்களில் நடத்தப்பட்டன. அங் மோ கியோ, பீஷான், ஹவ்காங், ஜூரோங் வெஸ்ட், பாசிர் பாஞ்சாங் உள்ளிட்ட இடங்களில் இவை அமைந்துள்ளன. "தீவு முழுவதிலும் நாங்கள் 20 விரைவு பரிசோதனை நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்," என்றது எச்பிபி. ஜிபிஸ் தளத்தில் வாரியம் பதிவு செய்துள்ள குத்தகை அழைப்பு குறித்து ஸ்டரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகை கேள்விகள் கேட்டபோது அது இவ்வாறு கூறியது.

