தேசிய இளையர் திரை விருதுகளில் உயிரோவிய திரைப்படங்கள் விருதுகளைப் பெருமளவில் குவித்துள்ளன. ஏழாவது முறையாக நடத்தப்படும் "புதிய விடியல்கள், புதிய தொடக்கங்கள்" என்ற கருப்பொருளைக் கொண்ட இந்நிகழ்ச்சி, நேற்று இணைய நேரலை மூலமாக நடந்தேறியது.
இந்த விருதுகளுக்கு 330 படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன. 56 படைப்புகள், 22 பரிசுகளுக்கு முன்மொழியப்பட்டன. இவற்றில் சில வீட்டிலேயே படம் எடுக்கப்பட்டன.
'டு கில் த பர்ட்ஸ் அன்ட் பீஸ்' என்ற படைப்பு, பெருமளவில் விருதுகளைக் குவித்தன.

