பிரபலமான பேட்டைகளில் 50% அதிக பிடிஓ வீடுகள்

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் முதிர்ச்சி அடைந்த பிர­பலமான குடி­யி­ருப்பு பேட்­டை­களில் அதிக பிடிஓ வீடு­களை விற்­ப­னைக்கு கொடுத்து உள்­ளது.

2017ஆம் ஆண்­டு­டன் ஒப்பிடுகையில் ஏறத்­தாழ 50 விழுக்­காடு அதி­க­மாக சென்ற ஆண்­டில் 13 திட்ட வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்பட்­ட­தாக கழ­கம் நேற்று தெரி­வித்­தது.

2017ல் விடப்பட்­ட­ மொத்த பிடிஓ வீடு­களில் 44 விழுக்­காடு முதிர்ச்சி அடைந்த பேட்­டை­களில் கட்­டப்­பட்­டன. இந்த விகி­தாச்­சா­ரம் சென்ற ஆண்டு 55 விழுக்­கா­டாகக் கூடி­யது என்று கழ­கம் குறிப்­பிட்­டு உள்ளது.

இருந்­தா­லும்­கூட பீஷான், தோ பாயோ அல்­லது காலாங்/வாம்போ போன்ற பிர­ப­ல­மான முதிர்ச்சி அடைந்த பேட்­டை­களில் விரும்­பிய வீட்­டைப் பெறு­வது என்­பது அவ்­வளவு எளி­தான ஒன்­றா­கத் தெரி­ய­வில்லை.

முதிர்ச்சி அடைந்த பேட்­டை­களில் வீவக வீடு­க­ளுக்­கான விண்­ணப்­பங்­க­ளின் சரா­சரி விகி­தம் 2017ல் 2.8 மடங்­காக இருந்­தது. அது சென்ற ஆண்டு 6.7 மடங்­காக அதி­க­ரித்­தது.

புக்­கிட் பாத்­தோக், தெங்கா போன்ற முதிர்ச்சி அடை­யாத பேட்டை­களில் இந்­தச் சரா­சரி விகி­தங்­கள் முறையே 2.1 மடங்­கா­க­வும் 4.8 மடங்­கா­க­வும் இருந்­தன.

ஒட்­டு­மொத்­தத்­தில் கடந்த நான்­காண்­டு­களில் புதிய வீடு­க­ளுக்கு தேவை அதி­க­மாக இருந்து வந்­துள்­ளது. ஒரு பிடிஓ வீட்­டிற்கு மனு செய்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 2017ல் 2.3 ஆக இருந்­தது. அது சென்ற ஆண்டு 5.8 ஆகக் கூடி இருக்­கிறது.

குறிப்­பாக சில திட்ட வீடு­களுக்கு 50 விண்­ணப்­பங்­கள் கூட வந்­தி­ருக்­கின்­றன. கொவிட்-19 கார­ண­மாக வீடு­க­ளுக்­கான காத்­தி­ருப்பு கால­மும் கூடி இருக்­கிறது.

திரு­ம­ணம், குடும்ப வாழ்வு, மாறும் வாழ்க்கைப் பாணி, சமூக விருப்­பங்­கள் ஆகி­யவை கார­ண­மாக அர­சாங்க வீடு­க­ளுக்கு வலு­வான தேவை இருக்­கிறது என்று கழ­கம் கூறி­யது.

இளைய தம்­ப­தி­களில் அதி­க­மா­னோர் தனிக்­கு­டித்­த­னத்தை விரும்­பு­கி­றார்­கள் என்­ப­தை­யும் கழ­கம் சுட்­டி­யது.

குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு அரு­கில் வசிக்­க­வும் நாட்­டம் அதி­க­ரித்து இருக்­கிறது.

இத­னி­டையே, பிடிஓ வீடு­கள் சீராக கிடைப்­பதைக் கழ­கம் தொடர்ந்து நிலை­நாட்டி வரும்.

இந்த ஆண்டு திட்­ட­மிட்­ட­தைப் போல ஏறத்­தாழ 17,000 வீடு­கள் விற்­ப­னைக்கு கொடுக்­கப்­படும் என்­றும் கழ­கம் தெரி­வித்­துள்­ளது.

அடுத்த மாதம் ஹவ்­காங், ஜூரோங் ஈஸ்ட், காலாங்/வாம்போ, குவீன்ஸ்­ட­வுன், தெம்­ப­னி­சில் ஏறத்­தாழ 4,900 பிடிஓ வீடு­கள் விற்­பனைக்கு வரும்.

வரும் நவம்­ப­ரில் சுவா சூ காங், ஹவ்­காங், ஜூரோங் வெஸ்ட், காலாங்/வாம்போ, தெங்கா ஆகி­ய­வற்­றில் ஏறத்­தாழ 3,100 முதல் 3,600 பிடிஓ வீடு­கள் விற்­ப­னைக்குக் கொடுக்­கப்­படும்.

வீவக: கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய வீடுகளுக்குத் தேவை அதிகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!