முதியோருக்கு மூன்று அமைச்சர்கள் வலியுறுத்து: உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்

முதியோருக்கு மூன்று அமைச்சர்கள் வலியுறுத்து: உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்

1 mins read
b77fa62f-afe4-46fe-90ff-ee26f1cb38b1
சிங்கப்பூரில் 70 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள மக்களிடையே ஏறத்தாழ 70 விழுக்காட்டினர்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

சிங்­கப்­பூ­ரில் 200,000 முதி­ய­வர்­கள் இன்­ன­மும் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருக்­கி­றார்­கள். 60 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள அந்த முதி­ய­வர்­கள், உட­ன­டி­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் வலி­யு­றுத்தி கூறி இருக்­கி­றார்.

இந்­நி­லை­யில், மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன், துணைப் பிர­தமர் ஹெங் சுவீ கியட், நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் ஆகிய மூவ­ரும் முதி­யோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டி­யது மிக முக்­கி­ய­மா­னது என்­பதை ஃபேஸ்புக்­கில் சுட்­டிக்­காட்­டி­னர்.

தடுப்­பூசி பாது­காப்­பா­னது. காலம் கடந்து விடு­வ­தற்கு முன் விழித்­துக்­கொள்­ளுங்­கள் என்­றும் ஒவ்­வொ­ரு­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டி­யது கட்­டா­ய­மா­னது என்­றும் அந்த மூவ­ரும் விளக்­கி­னர்.

சிங்­கப்­பூர் முழு­வ­தும் நட­மா­டும் தடுப்­பூசி குழுக்­கள் அமைக்­கப்­பட்டு இருப்­பதை கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் இணை­த் தலை­வர்­களில் ஒரு­வ­ரான நிதி அமைச்சர் திரு வோங் சுட்­டி­னார்.

தேசிய பாது­காப்பு ஒருங்­கிணைப்பு அமைச்­ச­ரு­மான திரு டியோ, பிரிட்­டன், இஸ்­ரேல் போன்ற நாடு­களில் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரின் அளவு, சிங்­கப்­பூ­ரின் அள­வை­விட அதி­கம் என்­பதைச் சுட்­டி­னார்.

அந்த நாடு­க­ளின் நில­வ­ரங்­களில் இருந்­தும் கடந்த சில வாரங்­களில் நாம் சந்­தித்த அனு­ப­வத்­தில் இருந்­தும் சிங்­கப்­பூர் பல­வற்­றை­யும் கற்­றுக்­கொள்ள முடி­யும் என்­றும் திரு டியோ தெரி­வித்­தார்.

பொரு­ளி­யல் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான துணைப் பிர­த­மர் திரு ஹெங், முதி­ய­வர்­கள் முன்­ப­திவு செய்­யா­ம­லேயே நேர­டி­யாகச் சென்று தடுப்பூசி போட்­டுக்­கொள்­ள­லாம் என்­பதைச் சுட்­டிக்­காட்­டி­னார்.