இருவரை மீட்ட விமானப்படை

இருவரை மீட்ட விமானப்படை

1 mins read
cbed8d19-839e-407a-8270-e650d78ea39c
சிங்கப்பூர் குடியரசு விமானப்படையின் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்ற இரண்டு படங்களில் இது ஒன்று. படம்: சிங்கப்பூர் குடியரசு விமானப்படை/ஃபேஸ்புக் -

சிங்­கப்­பூர் குடி­ய­ரசு விமா­னப் படை ஜூலை 19ஆம் தேதி வர்த்­தகக் கலன் ஒன்­றில் இருந்து ஊழி­யர் ஒரு­வரை மீட்­டது.

சிங்­கப்­பூர் கடற்­க­ரை­யில் இருந்து ஏறத்­தாழ 100 கி.மீ. தொலை­வில் அந்­தக் கலன் இருந்­ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சிப்பந்தி திடீ­ரென்று நினை­வாற்­றலை இழந்­து­விட்­ட­தாக இந்­தப் படை தெரி­வித்­தது.

அடுத்த நாளன்று இந்­தப் படை­யின் தேடி மீட்­புக் குழு வேறு ஒரு வர்த்­தகக் கல­னில் இருந்த ஓர் ஊழி­ய­ரை­யும் மீட்டு வந்­தது. இவ­ருக்கு நெஞ்சு வலி இருந்­த­தாக இந்­தப் படை தெரி­வித்­தது.

இரு­வ­ரும் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளின் உடல்­நிலை சீராக இருப்­ப­தாக விமா­னப்படை குறிப்­பிட்­டது.

மீட்­கப்­பட்­ட­தைக் காட்­டும் இரண்டு புகைப்­ப­டங்­கள் விமானப் படை­யின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­வேற்­றப்­பட்­டன.

அந்த இரு­வ­ரும் விரை­வில் குண­ம­டை­வ­தைக் காண தான் விரும்­பு­வ­தாக ஃபேஸ்புக்­கில் விமா­னப்படை தெரி­வித்­தது.

இந்­தப் படை மாதம் ஒன்­றுக்கு சரா­ச­ரி­யாக ஏறத்­தாழ இரண்டு தேடி மீட்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கிறது.