உறுதி கூறியதைப் போல் பிரம்படித் தண்டனை ரத்து

சிங்­கப்­பூ­ரில் ஒரு வங்­கி­யில் $30,000க்கும் மேற்­பட்ட தொகை யைக் கொள்ளை அடித்த, கனடா­வைச் சேர்ந்த டேவிட் ஜேம்ஸ் ரோச் என்ற ஆட­வ­ருக்கு ஜூலை 7ஆம் தேதி ஐந்து ஆண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. ஆறு பிரம்­ப­டி­கள் கொடுக்­கும்­ப­டி­யும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

என்­றா­லும் பிரம்­ப­டி­கள் அவ­ருக்­குக் கொடுக்­கப்­ப­ட­மாட்டா என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் வங்­கி­யில் 2016ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி கொள்ளை அடித்த ரோச்­சுக்கு விதிக்­கப்­பட்ட பிரம்­படித் தண்­டனை ரத்­தா­ன­தாக உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது.

கொள்ளை அடித்­து­விட்டு ரோச் சிங்­கப்­பூரை விட்டு தப்­பிச் சென்­று­விட்­டார். பிரிட்­ட­னில் இருந்த அவரை இங்கு திருப்பி அனுப்­பும்­படி சிங்­கப்­பூர் கோரிக்கை விடுத்­தது.

ரோச் சிங்­கப்­பூ­ருக்­குத் திருப்பி அனுப்­பப்­படும் பட்­சத்­தில் அவருக்­குப் பிரம்­படித் தண்­டனை கொடுக்­கப்­ப­டாது என்று பிரிட்­டனி­டம் சிங்­கப்­பூர் உறுதி தெரி­வித்­தது. அதை நிறைவேற்­றும் வகை­யில் அந்­தத் தண்­டனை ரத்­தா­ன­தாக அமைச்சு குறிப்­பிட்டது.

அமைச்­ச­ரவை ஆலோ­ச­னை­யின் பேரில், சிங்­கப்­பூர் அர­ச­மைப்­புச் சட்­டப் பிரிவு 22பி(1)ன் கீழ் தனக்­குள்ள அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி அதி­பர் அந்த ஆறு பிரம்­படித் தண்­ட­னையை ரத்து செய்து இருக்­கி­றார் என்றும் அமைச்சு தெரிவித்தது.

பிரிட்ட­னுக்கு கொடுத்த உறு­தியை இதன் மூலம் சிங்­கப்­பூர் அரசாங்கம் நிறை­வேற்றி இருக்­கிறது என்­றும் பிரம்­ப­டிக்­குப் பதிலாக ரோச்­சுக்கு வேறு தண்டனை எது­வும் இராது என்றும் உள்துறை அமைச்சு தெரி­வித்­து உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!