வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் தாய்ப்பால் கொடுக்க அதிக நேரம்

வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் தாய்ப்பால் கொடுக்க அதிக நேரம்

2 mins read
35a1a7e3-b056-4b8f-b52a-c011af356ed2
-

கொவிட்-19 தொற்று கார­ண­மாக வீட்­டில் இருந்தே வேலை பார்க்­கும் கலா­சா­ரம் ஏற்பட்டுள்ளது. இத­னால் ஒரு நன்மை கைகூடி இருக்கிறது.

வீட்­டில் இருந்­த­ப­டியே வேலை பார்க்­க­லாம் என்­ப­தால் தங்­கள் பிள்­ளைக்­குத் தாய்ப்­பால் கொடுக்க பல தாய்மார்­களுக்கு அதிக நேரம் கிடைக்­கிறது.

"கொவிட் தொற்று இல்லை எனில் என் நிறு­வ­னம் நடத்­தும் பல கூட்­டங்­களில் கலந்­து­கொள்ள செல்ல வேண்­டி இருக்­கும். குழந்­தைக்­குத் தாய்ப்­பால் கொடுக்க போதி­ய­ நே­ரம் இருக்­காது," என்று சென்ற ஆண்­டில் பெண் குழந்­தை­யைப் பெற்ற திரு­வாட்டி கிறிஸ்­டல் கோ, 30, என்­பவர் கூறி­னார்.

இத்­தகைய தாய்­மார்­க­ளைப் பொறுத்­த­வரை, வீட்­டில் இருந்து வேலை பார்ப்­பது ஒரு வரப்­பி­ர­சா­தம் என்று கேகே மகளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த குழந்தை மருத்­து­வத் துறை தலை­வ­ரான மூத்த ஆலோ­சகர் இணைப் பேரா­சி­ரியர் சுவா மெய் சியென் கூறு­கி­றார்.

வீட்­டில் இருந்தே வேலை பார்க்­கும் போக்கு கார­ண­மாக இந்த மருத்­து­வ­ம­னை­யின் தாய்ப்­பால் வங்­கி­யும் நன்மை அடைந்­துள்­ளது. மற்ற நாடு­களில் நிலைமை வேறு வித­மாக இருக்­கை­யில் இங்கு இரண்டு மாதங்­க­ளுக்­குத் தேவை­யான தாய்ப்­பால் இருப்­பில் உள்­ளது என்று அவர் கூறினார்.

இந்தத் தாய்ப்பால் வங்­கிக்கு கடந்த ஓராண்டு காலத்­தில் கொடை­யா­கத் தரப்­பட்ட தாய்ப்­பால் சரா­சரி அளவு 12 லிட்­ட­ரில் இருந்து 30 லிட்­ட­ரா­கக் கூடி இருக்­கிறது.

நன்­கொ­டை­யாக வழங்­கப்­படும் தாய்ப்­பாலை கெடா­மல் பாது­காத்து அதை மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறும் கைக்­கு­ழந்­தை­களுக்­கும் குறை பிர­ச­வத்­தில் பிறந்த குழந்தை­க­ளுக்­கும் இந்த வங்கி கொடுக்­கிறது.