துணைப் பிரதமர்: பொருளியல், நிதி நிர்வாகம் கற்பது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் உதவும்

துணைப் பிரதமர்: பொருளியல், நிதி நிர்வாகம் கற்பது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் உதவும்

2 mins read
4796c3c7-0032-471e-88c6-32073f96027c
-

பொரு­ளி­ய­லை­யும் நிதி நிர்­வா­கத்­தை­யும் நன்கு புரிந்­து­கொள்­வது இளை­யர்­க­ளுக்­குப் பய­னுள்­ள­தாக இருக்­கும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்தார்.

அந்­தப் புரிந்­து­ணர்வு, நடை­முறை வாழ்க்­கை­யில் ஏற்­ப­டக்­கூ­டிய பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­காண உத­வும் என்­றும் அவர் தெரி­வித்து உள்ளார்.

பொரு­ளி­ய­லி­லும் நிதித் துறை­யி­லும் நாட்டத்தை உரு­வாக்கிக் கொண்டு அதை வளர்த்­துக்கொள்­ளும்­படி இளை­யர்­களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

'தேசிய பொரு­ளி­யல், நிதி நிர்­வா­கச் சவால்' என்ற மெய்­நி­கர் போட்டி நிகழ்ச்­சி­யின் இறு­திச்­சுற்­றில் துணைப் பிர­த­மர் பேசி­னார்.

பொதுக் கொள்­கை­களை உரு­வாக்க, பொரு­ளி­யல், நிதி நிர்­வா­கம் இரண்­டின் அடிப்­ப­டை­களைப் பயன்­ப­டுத்த முடி­யும் என்­றும் திரு ஹெங் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பொரு­ளி­யல் சங்­கம் ஏற்­பாட்­டில் அந்­தப் போட்டி நடந்­தது. மேல்­நி­லைக் கல்­வி­யைத் தொடர்­வதற்கு முன் மாண­வர்­கள் பொரு­ளி­ய­லி­லும் நிதி நிர்­வா­கத்­தி­லும் அதிக நாட்­டம் கொள்­வதை உறு­திப்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் அந்­தப் போட்­டிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டது.

14வது ஆண்­டாக இந்த ஆண்டு அந்­தப் போட்டி இம்­மா­தம் தொடங்­கி­யது.

ஏற்­கெ­னவே இரண்டு சுற்­று­கள் முடி­வ­டைந்து இருக்­கின்­றன.

கொவிட்-19 கார­ண­மாக நிச்­ச­ய­மில்­லாத நிலை ஏற்­பட்டு இருக்­கிறது என்­றும் இத­னால் தங்­கள் எதிர்­கா­லம் எப்­படி இருக்­குமோ என்று இளை­ஞர்­கள் கவ­லைப்­ப­டு­கி­றார்­கள் என்­றும் திரு ஹெங் தெரி­வித்­தார்.

கொவிட்-19 சூழ­லால் சில கதவு­கள் அடைபட்டு இருக்­கின்­றன. அதே நேரத்­தில் பல புதிய கத­வு­கள் திறந்து இருக்­கின்­றன.

கொவிட்-19க்குப் பிந்­தைய உல­கம் முந்­தைய உல­கத்­தைப் போல் அல்­லா­மல் வேறு­பட்டு இருக்­கும். இருந்­தா­லும் வருங்­கால உல­க­ம் மிக­வும் ஊக்­க­மிக்­க­தா­கத் திக­ழும் என்று அவர் தெரி­வித்­தார்.

கொவிட்-19 கார­ண­மாக மின்­னி­லக்­கப் புரட்சி ஏற்­பட்டு இருக்­கிறது என்­ப­தை­யும் சுற்­றுச்­சூ­ழல் நிலைப்­பாட்­டில் புதி­தாக நாட்­டம் மேம்­பட்டு இருக்­கிறது என்­ப­தை­யும் திரு ஹெங் சுட்­டிக்­காட்­டி­னார்.

புதிய வாய்ப்­பு­க­ளைப் பயன்­படுத்­திக்­கொள்ள நல்ல நிலை­யில் நம் இளை­ஞர்­கள் இருக்­கி­றார்­கள் என்­பதை­யும் அவர் சுட்டினார்.

பொருளி­யலை நன்கு புரிந்­து­கொண்­டால் வேலையைப் பெறு­வதற்­கான தகுதியை வளர்த்­துக்­கொள்ள உதவி கிடைக்­கும்.

அதோடு மட்­டு­மின்றி அதற்கு அப்­பா­லும் பல நன்­மை­கள் ஏற்­படும் என்று திரு ஹெங் கூறி­னார்.