முழங்கால் மூட்டு விலகும் விபத்துகள் இளையர்களிடம் அதிகரிப்பு

முழங்கால் மூட்டு விலகும் விபத்துகள் இளையர்களிடம் அதிகரிப்பு

2 mins read
9cfacadf-307c-4b79-9bf6-752fc2d327d6
-

சிங்­கப்­பூ­ரில் விளை­யாட்டு, உடற்­பயிற்சி போன்­ற­வற்­றில் ஈடு­பட்டு சுறு­சு­றுப்­பாக இருந்து வரும் இளை­யர்­க­ளி­டையே முழங்­கால் மூட்டு விலகிவி­டும் சம்பவங்கள் அதி­க­மாகி இருக்­கின்­றன.

ஒவ்­வோர் இரண்டு வாரங்­களுக்­கும் சரா­சரியாக நான்கு பேர் அத்­தகைய நிலைக்கு ஆளா­வ­தாக தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­துவ மனை தெரி­வித்­துள்­ளது.

இந்­தச் சரா­சரி விகி­தம் 2016ல் இரண்டு வாரங்­க­ளுக்கு ஒன்­றாக இருந்­தது. முழங்­கால் மூட்டு விலகி­வி­டும் விபத்­து­கள் பொது­வாக பதின்ம வய­தி­ன­ரி­டையே நிகழ்­வ­தா­கத் தெரிகிறது. இந்த பல்­கலைக்­க­ழ­கத்­தின் சிறார் எலும்பு மூட்டு சிகிச்சை துறை இப்­போது ஆண்­டுக்கு ஏறத்­தாழ 100 பேருக்கு இத்­த­கைய சிகிச்­சையை அளிக்­கிறது.

முழங்கால் முட்­டியை வேக­மாகத் தரை­யில் ஊணும்போது அல்­லது காலை வேகமாக திருப்­பும்­போது மூட்டு விலகிவி­டு­வ­துண்டு.

நட­னம் ஆடும்­போது, காற்­பந்து, கைப்­பந்து போன்ற விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டும்­போது இத்­த­கைய சங்­க­டங்­கள் ஏற்­ப­ட­லாம்.

என்­றா­லும் ஓட்­டப்­பந்­த­யத்­தில் ஓடும்­போது முழங்­கால் மூட்டு விலகிவி­டக்­கூ­டிய வாய்ப்பு குறைவு­ தான். இருந்தாலும் முட்டி பல­வீ­ன­மா­ன­வர்­க­ளுக்கு இந்த ஆபத்து ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு உண்டு.

பதின்ம வயது இளை­யர்­கள் காற்­பந்து, கூடைப்­பந்து போன்ற விளை­யாட்­டு­களில் மும்முரமாக ஈடு­படுகிறார்கள்.

இதுவே முழங்­கால் மூட்டு விலகிவி­டும் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து இருப்­ப­தற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் என்று இந்­தப் பல்­கலைக்கழ­கத்­தின் எலும்பு அறுவை சிகிச்சை துறைத் தலை­வர் பேரா­சி­ரி­யர் ஜேம்ஸ் ஹுய் தெரி­வித்­தார்.

உல­களவில் 100,000 சிறார்­கள் மற்­றும் பதின்மவய­தினரில் ஏறத்­தாழ 40 பேருக்கு இந்த வகை பாதிப்பு ஏற்­ப­டு­கிறது.

15 வயது சிறார்­கள்­தான் அதிகம் பாதிக்­கப்­படுகிறார்­கள். முதல் முறை முழங்­கால் மூட்டு விலகி­விடும் போது பெரும்­பாலும் அறுவை சிகிச்சை தேவைப்­ப­டாது. அவர்கள் பயிற்சி சிகிச்சை மூலம் சரிசெய்து விடலாம்.

என்­றா­லும் திரும்­பத் திரும்ப அதே பிரச்­சினை ஏற்­பட்­டால் அறுவை சிகிச்சை தேவைப்­ப­ட­லாம்.

முழங்­கால் மூட்டுப் பிரச்­சினை மீண்­டும் மீண்­டும் ஏற்­பட்­டால் அத்­த­கைய பாதிப்­புக்கு என்ன கார­ணம் என்­ப­தைக் கண்­டு­பி­டித்து சிகிச்­சையை நாட வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது என்று பேரா­சி­ரி­யர் ஹுய் தெரி­வித்­தார்.