சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 72,000 பேர் குறைந்தது ஒரு 'சினோவேக்' தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு உள்ளதாகவும் ஏறத்தாழ 17,000 பேர் இருமுறையும் அதனைப் போட்டுக்கொண்டதாகவும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 26) தெரிவித்தார்.
அவர்களில் சிங்கப்பூரர்கள் 28 விழுக்காட்டினர் என்றும் பெரும்பாலும் இளையர்கள் என்றும் அவர் சொன்னார். சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டோரில் பத்து விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள்.

