மோசடிப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றால் வங்கிகளுக்கும் பயனீட்டாளர்களுக்கும் என்ன நிகழும் என்பது தொடர்பில் தெளிவாக வழிகாட்டி நெறிமுறைகளை வழங்குவதற்கான மறுஆய்வு இவ்வாண்டு இறுதிக்குள் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். அதன் தொடர்பில் இப்போதுள்ள கட்டமைப்பை மெருகேற்றுவது தொடர்பில் சிங்கப்பூர் நாணய ஆணையம், வங்கிகளுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இவ்வாண்டு பிப்ரவரிவரை பண அட்டைகள் மூலம் மோசடிப் பரிவர்த்தனை இடம்பெற்றதாகக் காவல் துறைக்கு 89 புகார்கள் வந்ததாக அமைச்சர் வோங் குறிப்பிட்டார். ஒற்றைப் பயன்பாட்டு மறைச்சொல் குறுஞ்செய்தி மூலம் அந்த மோசடிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மோசடி: வழிகாட்டி நெறிமுறை மறுஆய்வு
1 mins read
-

