சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொண்ட 72,000 பேர்

சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொண்ட 72,000 பேர்

1 mins read
3f61443c-3bb9-4c7a-b042-8ac9a286f19a
-

கிட்டத்தட்ட 72,000 பேர் குறைந்தது ஒரு 'சினோவேக்' தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாகவும் ஏறத்தாழ 17,000 பேர் இருமுறையும் அதனைப் போட்டுக்கொண்டதாகவும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். அவர்களில் சிங்கப்பூரர்கள் 28 விழுக்காட்டினர் என்றும் பெரும்பாலும் இளையர்கள் என்றும் அவர் சொன்னார். சினோவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டோரில் பத்து விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள். (படம்) பிக்கரிங் ஸ்திரீட்டில் உள்ள 'டாக்டர்ஸ் ஃபார் லைஃப் மெடிக்கல்' மருந்தகத்திற்குமுன் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள நேற்று காத்திருந்தோர். இங்கு சினோவேக் தடுப்பூசி போடப்படும் என்று சீன மொழியில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. படம்: திமத்தி டேவிட்