டெஸ்மண்ட் லீ: 2022ல் பிடிஓ வீடுகளை குறைக்க திட்டமில்லை

டெஸ்மண்ட் லீ: 2022ல் பிடிஓ வீடுகளை குறைக்க திட்டமில்லை

2 mins read
0f31f27b-f2fc-4596-b2ea-67dee683da71
-

அடுத்த ஆண்டு விற்­ப­னைக்கு விடப்­படும் பிடிஓ வீடு­க­ளின் எண்­ணிக்­கையைக் குறைக்­கத் திட்­டம் இல்லை என்­றும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் இவ்­வாண்டு திட்­ட­மிட்­ட­படி 17,000 வீடு­களை விற்­ப­னைக்கு விட ஆயத்தமாகி வரு­கிறது என்­றும் தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ கூறி­யுள்­ளார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று அமைச்­சர் இத­னைத் தெரி­வித்­தார்.

அடுத்த ஆண்டு 17,000 அல்­லது அதற்­கும் அதி­க­மான வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­படும் என்­றும் இவ்­வாண்டு எண்­ணிக்­கை­யை­விட அது குறை­யாது என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

கொரோனா கிரு­மிப்­ ப­ர­வ­லால் ஏற்­பட்­டுள்ள தாம­தத்­துக்கு தீர்­வு­காண வீவக தொடர்ந்து குத்­தகை நிறு­வ­னங்­க­ளு­டன் பணி­யாற்றி வரு­வ­தாக அவர் கூறி­னார். பிடிஓ வீடு­க­ளின் விநி­யோ­கம் பற்றி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கான் தியாம் போ, டெஸ்­மண்ட் சூ ஆகி­யோர் கேட்ட கேள்­வி­க­ளுக்கு திரு லீ பதில் அளித்­தார்.

அடுத்த ஆண்­டில் வீடு­க­ளுக்­கான தேவை­யைக் கணித்­தும் சொத்­துச் சந்­தை­யைக் கண்­ காணித்து வரு­வ­தா­கச் சொன­னார் திரு லீ. அடுத்த ஆண்டு விற்­ப­னைக்கு வரும் வீடு­க­ளின் எண்­ணிக்கை விரை­வில் அறி­விக்­கப்­படும் என்­றார் அவர்.

முந்­தைய இரண்டு ஆண்­டு­களை­விட இவ்­வாண்டு அதி­க­மான வீடு­கள் விற்­ப­னைக்கு வரு­கின்­றன. கடந்த 2019ல் 14,600 வீடு­களும் கடந்த ஆண்டு 16,800 விடு­களும் விற்­ப­னைக்கு விடப்­பட்­டன.

அத்­து­டன், பிடிஓ வீடு வாங்­கு­வோர் கட்­டு­மா­னத் தாம­தத்­தால் பாதிக்­கப்­பட்டு, தங்­கள் பதிவை ரத்து செய்ய முடிவு செய்­ய­லாம். அப்­போது தாங்­கள் செலுத்­திய முன்­ப­ணம் அல்­லது தெரி­வுக் கட்­ட­ணத் தொகையை அவர்­கள் இழக்க வேண்­டி­யி­ருக்­கும். மீண்­டும் விண்­ணப்­பிக்க காத்­தி­ருக்­க­வும் வேண்­டி­யி­ருக்­கும்.

விண்­ணப்­ப­தா­ர­ரின் தனிப்­பட்ட சூழ்­நி­லை­யைப் பொறுத்து, அத்­தொ­கை­யைப் பறி­மு­தல் செய்யாமல் இருப்பது பற்றி வீவக முடிவெடுக்கும் என்றார் திரு லீ.

கட்­டு­மா­னச் செல­வு­க­ளின் அதி­க­ரிப்­புக்கு வீட்டு விலை­களும் உயர்த்­தப்­ப­டாது என்று அமைச்சர் திரு டெஸ்மண்ட் லீ குறிப்­பிட்­டார்.