நியாயமான நடைமுறைகளை காக்க முத்தரப்புச் செயற்குழு

நியாயமான நடைமுறைகளை காக்க முத்தரப்புச் செயற்குழு

1 mins read
12153328-b215-426f-9d0b-95b7ee3763e5
-

வேலை­யி­டத்­தில் நியா­ய­மான நடை­மு­றையை உறு­தி­செய்ய முத்­த­ரப்­புச் செயற்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக மனி­த­வள அமைச்­சர் டாக்­டர் டான் சீ லெங் கூறி­யுள்­ளர்.

ஊழி­யர் அணி­யில் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் எண்­ணிக்­கையை வலுப்­ப­டுத்­து­வது, வேலை­யி­டத்­தில் நியா­யமான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்­வது ஆகி­யவை தொடர்­பாக நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று பேசிய மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அவர் பதில் அளித்­தார்.

வேலை­யி­டத்­தில் நியா­ய­மான நடை­மு­றை­களை உறு­தி­செய்ய சிங்­கப்­பூர் ஏற்­கெ­னவே வைத்­தி­ருக்­கும் நடை­மு­றை­களை சட்­டங்­களாக இயற்­று­வ­து­தான் சிறந்த வழியா என்­பது பற்றி முத்­த­ரப்­புக் குழு ஆரா­யும்.

"தவறு செய்­யும் முத­லா­ளி­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க சட்­டங்­கள் கூடு­தல் அதி­கா­ரம் அளிக்­கும். எனி­னும் சட்­டம் இயற்­று­வ­தால் மட்­டும் வேலை­யி­டத்­தில் நியா­ய­மான நடை­மு­றை­கள் மேம் ­ப­டாது," என்றார் டாக்­டர் டான்.

தொழிற்­சங்­கங்­கள், முத­லா­ளி­கள் உள்­ளிட்ட பங்­கா­ளி­க­ளு­டன் கலந்து ஆலோ­சித்து, முத்­த­ரப்­புக் செயற்­குழு அதன் பணியை அடுத்த ஆண்டு முதற்­பா­திக்­குள் முடிக்­கும்.

முத்­த­ரப்­புச் செயற்­கு­ழு­வின் இணைத் தலை­வர்­க­ளாக தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ர­சின் தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங், சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னத்­தின் தலை­வர் ராபர்ட் யாப் இரு­வ­ரும் செயல்­ப­டு­வார்கள்.