உள்ளுரில் புதிதாக 129 பேருக்குக் கிருமித்தொற்று

2 mins read
4177a588-37b6-4c19-b04d-a97fdbf80e9d
கேலாங் பாாரு சந்தை, 146 டெக் வாய் அவென்யூ சந்தை தொடர்பிலான விநியோக நடவடிக்கை அவற்றின் உள்ள அரு­கில் உள்ள குடி­யி­ருப்­பா­ளர் நிலை­யங்­களில் நடைபெற்று வருகின்றன. படம்: திமத்தி டேவிட் -

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்ப­கல் நில­வ­ரப்­படி உள்­ளூ­ரில் புதி­தாக 129 பேருக்­கு கொரோனா தொற்­றி­யது. அவர்­களில் 61 பேர் ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கத் தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று சுகா­தார அமைச்சு நேற்று அதன் அன்­றாட அறிக்­கை­யில் கூறி­யது.

அதன்படி, ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கத் தொற்­றுக்­கு­ழு­மத்­தில் மொத்­தம் 853 பேர் உள்­ள­னர்.

மேலும், 'கேடிவி' நிலை­யக் குழு­மத்­தின் தொடர்­பில் ஆறு புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டன. அக்­கு­ழு­மத்­தில் உள்ள தொற்­று­க­ளின் எண்­ணிக்கை மொத்­தம் 243 ஆகும்.

நேற்று அறி­விக்­கப்­பட்ட 129 சம்­ப­வங்­களில் முன்­ன­தாக கண்­ட­றி­யப்­பட்ட 76 தொற்­றுச் சம்­ப­வங்­ க­ளு­டன் தொடர்­புள்­ளவை. அவர்­கள் ஏற்­கெ­னவே தனி­மை­யில் இருந்து வந்­த­னர். மேலும் 25 சம்­ப­வங்­கள் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களில் கண்­ட­றி­யப்­பட்­டன.

மீத­முள்ள 28 சம்­ப­வங்­கள் வேறு தொற்­றுச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பில்­லா­தவை. அவர்­களில் ஒரு­வர் 70 வய­துக்­கும் அதி­க­மான முதி­ய­வர். ஒரு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­போ­தும் அவ­ருக்கு கடும் நோய் ஏற்­படும் அபா­யம் உள்­ளது.

அத்துடன், வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த ஆறு பேருக்கு உண்டானது.

இதற்­கி­டையே கேலாங் பாரு சந்தை, உண­வங்­காடி அரு­கி­லும் 146 டெக் வாய் அவென்யூ சந்தை அரு­கி­லும் வசிப்­ப­வர்­கள் நேற்று தங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட இல­வச விரைவு கிரு­மிப் பரி­சோ­த­னைக் கரு­வி­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளத் தொடங்­கி­னர். இன்­று­வரை அந்த விநி­யோக நட­வ­டிக்கை தொட­ரும்.

கடந்த இரண்டு வாரத்­தில் தேர்வு செய்­யப்­பட்ட சந்­தை­க­ளுக்­குச் சென்று வந்­த­வர்­க­ளுக்­கும் அவற்­றின் அரு­கில் வசிப்­ப­வர்­களுக்­கும் பரி­சோ­த­னைக் கரு­வி­களை வழங்க மக்­கள் கழகத்­து­டன் இணைந்து சுகாதார அமைச்சு பணி­யாற்றி வரு­கிறது.