உற்பத்தித் துறை வளர்ச்சி தொடர்ந்து 8வது மாதமாக உயர்வு

உற்பத்தித் துறை வளர்ச்சி தொடர்ந்து 8வது மாதமாக உயர்வு

2 mins read
cce6a10b-ee7e-4761-8d58-1ef0b1abb686
-

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக் கட்­டுப்­பா­டு­கள் சூழ்­நி­லை­யி­லும் சிங்­கப்­பூ­ரின் உற்­பத்­தித் துறை தொடர்ந்து எட்­டா­வது மாத­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது.

தொழில்­துறை உற்­பத்தி கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 27.5% விரி­வ­டைந்­தது. அது புளும்­பர்க் நிறு­வ­னம் முன்­னு­ரைத்த 27.2% வளர்ச்­சி­யை­விட சற்று உயர்­வா­னது.

நிலை­யற்ற உயிர்­ம­ருத்­துவ உற்­பத்­தித் துறை­யைத் தவிர்த்து, பொது­வான உற்­பத்­தித் துறை 24.8% ஏற்­றம் கண்­ட­தாக பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் நேற்று வெளி­யிட்ட தர­வு­கள் காட்­டின.

மாதத்­துக்கு மாதம் என்ற அடிப்­ப­டை­யில், ஒட்­டு­மொத்த உற்­பத்­தித் துறை 3% சரிந்­தது. உயிர்­ம­ருத்­துவ உற்­பத்­தி­யைத் தவிர்த்த பொது­வான உற்­பத்­தித் துறை 0.7% வளர்ச்சி கண்­டது.

ஆண்டு அடிப்­ப­டை­யில், உயிர் மருத்­துவ உற்­பத்தி கடந்த மாதம் 42.5% வளர்ச்­சி­ய­டைந்­தது. மருந்­தி­யல் துறை­யில் ஏற்­பட்ட அதிக உற்­பத்­தியே அதற்­குக் கார­ணம்.

மருத்­து­வத் தொழில்­நுட்­பம், கடந்த ஆண்­டு­டன் ஒப்­பு­நோக்க இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் 3.75% வளர்ச்சி கண்­டது. உயிர்­ம­ருத்­துவ உற்­பத்தி இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­க­ளுக்கு 5% ஏற்­றம் கண்­டது.

சிங்­கப்­பூ­ரின் முக்­கி­ய­மான மின்­ன­ணு­வி­யல் உற்­பத்தி கடந்த ஆண்­டு­டன் ஒப்­பு­நோக்க 26.2% வளர்ச்சி அடைந்­தது.

தக­வல் தொடர்பு, பய­னீட்­டா­ளர் மின்­ன­ணு­வி­யல் துறை­க­ளைத் தவிர மற்ற எல்லா துறை­களும் விரி­வ­டைந்­தன. இந்­தக் குழு­மம் இவ்­வாண்­டின் முதல் அரை­யாண்­டில் 23.6% வளர்ச்சி கண்­டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

துல்­லிய பொறி­யி­யல் உற்­பத்தி, ஆண்டு அடிப்­ப­டை­யில் 22.2% வளர்ச்சி கண்­டது. அதில் இயந்­தி­ரம் மற்­றும் அமைப்­பு­மு­றை­வின் வளர்ச்சி 28.6%. பகுதி மின்­க­டத்தி மற்­றும் தொழில்­துறை செயல் முறைச் சாத­னம் ஆகி­ய­வற்­றில் தென்­பட்ட வளர்ச்­சியே துல்­லிய பொறி­யி­யல் உற்­பத்­தி­யின் வளர்ச்­சிக்கு முக்­கிய கார­ணங்­க­ளாக இருந்­தன.

பெட்­ரோ­லி­யத் துறை­யின் வளர்ச்சி கார­ண­மாக ரசா­ய­னத் துறை­யும் 30.6% வளர்ச்சி கண்­டது.

போக்­கு­வ­ரத்­துப் பொறி­யி­யல் 28.3% வளர்ந்­தது. பொது­வான உற்­பத்தி ஆண்டு அடிப்­ப­டை­யில் 17.4% உயர்ந்­தது என்று பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் கூறி­யது.