கிருமிப்பரவல் தொடர்பான தற்காலிகப் பணிகளில் 15,000 பேர் அமர்த்தப்பட்டனர்

கிருமிப்பரவல் தொடர்பான தற்காலிகப் பணிகளில் 15,000 பேர் அமர்த்தப்பட்டனர்

1 mins read
21f14dce-6cc9-4dd1-8f73-09b16fd0c6c4
-

கொரோனா பர­வல் தொடங்­கி­ய­தி­லி­ருந்து, 15000க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் பொதுத் துறை­யில் அல்­லது அர­சாங்க நிதி பெற்ற குறு­கிய காலப் பணி­களில் வேலைக்கு அமர்த்­தப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்­சர் டாக்­டர் டான் சீ லெங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று கூறி­னார்.

இவர்­கள் எஸ்ஜி ஒற்­றுமை வேலை­கள், திறன்­கள் தொகுப்­புத் திட்­டத்­தின் கீழ், கொவிட்-19 பர­வல் தொடர்­பான வேலை­களில் பணி அமர்த்­தப்­பட்­ட­னர். கிரு­மிப் பரி­சோ­தனை செய்­தல், நோயாளி சேவை­களை வழங்­கு­தல், இல்­லத் தனிமை உத்­த­ரவு நடை­மு­றை­கள், பாது­காப்­பான இடை­வெளி நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­தல் ஆகிய பணி­களை இவர்­கள் செய்­துள்­ள­னர்.

கொரோனா பர­வ­லுக்­குப் பின்­னர் இப்பணி­யா­ளர்­க­ளின் நிலை­யைப் பற்றி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஷாரில் தாஹா, ரயீஸா கான் இரு­வ­ரும் எழுப்­பிய கேள்வி களுக்கு அவர் பதில் அளித்­தார்.

மோச­மா­கப் பாதிக்­கப்­பட்ட துறை­களில் உள்ள ஊழி­யர்­ களுக்கு உத­வும் தேசிய வேலை­கள் மன்­ற முயற்­சி­யின் பகு­தி­யாக பத்­தில் மூன்று பேர் தற்­கா­லிக வேலை­களில் அமர்த்­தப்­பட்­ட­னர். இவர்­கள் கிரு­மிப்­ப­ர­வல் தாக்­கம் தணிந்­த­பின்­னர் தங்­கள் முந்­தைய வேலை­க­ளுக்­குத் திரும்­பு­வர் என்று எதிர்­பார்ப்­ப­தாக டாக்­டர் டான் கூறி­னார். மற்றவர்கள், வேலை தேடித்­த­ரும் சேவை­கள், மனி­த­வள அமைச்­சின் சேவை­கள் ஆகி­ய­வற்­றில் வேலை தேடிப் பெறா­லாம் என்­றார் அவர்.