பள்ளி, தொடக்கக் கல்லூரி மேம்பாடுகளில் தாமதம்

ெகாவிட்-19 ெகாள்­ளைே­நாய் சூழ­லில் இரண்டு பள்­ளி­கள், இரண்டு உயர்­நி­லைப் பள்­ளி­கள், நான்கு தொடக்­கக் கல்­லூ­ரி­கள் ஆகி­ய­வற்­றில் மேற்­கொள்­ளப்­பட இருந்த கட்­டு­மான, மேம்­பாட்­டுப் பணி­களில் தாம­தம் ஏற்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவை ஈராண்­டு­கள் வரை தாம­தா­மா­க­லாம் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

தற்­போ­தைய சூழ­லில் மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை, கட்­டு­மா­னப் பொருள் விநி­யோ­கத்­தில் ஏற்­பட்­டுள்ள தடங்­கல் ஆகி­ய­வற்றை கார­ணம் காட்டி கல்வி அமைச்சு நேற்று இவ்­வாறு தெரி­வித்­தது.

ஆண்­டர்­சன் தொடக்­கக் கல்­லூரி, தெமா­செக் தொடக்­கக் கல்­லூரி, ஜூரோங் பைனி­யர் தொடக்­கக் கல்­லூரி ஆகி­ய­வற்­றின் புதிய கட்­ட­டங்­கள் முன்­னர் 2025ஆம் ஆண்டு இறு­தி­யில் தயா­ரா­கி­வி­டும் என்று கூறப்­பட்­டது.

தற்­பொ­ழுது இவை 2028ஆம் ஆண்டு ஜன­வரி மாதம்­தான் தயா­ரா­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­குக் கார­ணம் அந்­தக் கல்வி நிலை­யங்­க­ளின் தற்­போ­தைய கட்­ட­டங்­களை புதுப்­பிக்­க­வும் புதிய கட்­ட­டங்­க­ளைக் கட்டி முடிக்­க­வும் கூடு­தல் கால அவ­கா­சம் தேவைப்­ப­டு­கிறது என அமைச்சு விளக்­க­ம­ளித்­துள்­ளது.

இதற்­கி­டையே, இன்­னோவா தொடக்­கக் கல்­லூ­ரி­யின் மேம்­பாட்­டுப் பணி­கள் ஓராண்டு தாம­த­ம­டை­யும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

உட்­லண்ட்­ஸில் உள்ள அதன் வளா­கத்­தில் மேம்­பாட்­டுப் பணி­கள் முடிந்­த­வ­டைந்த பின் இன்­னோவா தொடக்­கக் கல்­லூரி அங்கு பழை­ய­படி செயல்­படும் என்று தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதே­போல், உட்­லண்ட்ஸ் ரிங் உயர்­நி­லைப் பள்ளி, ஹாய் சிங் உயர்­நி­லைப் பள்ளி ஆகி­ய­வற்­றின் மேம்­பாட்­டுப் பணி­களும் முடி­வ­டைய கூடு­த­லாக ஓராண்டு தேைவப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போ­தைய நிலை­யில், அது தனது தற்­கா­லிக வளா­கத்­துக்கு ஜன­வரி மாதம் 2023ஆம் ஆண்டு செல்­வ­து­டன் அங்கு அது டிசம்­பர் 2024ஆம் ஆண்டு வரை இருக்­கும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

ஃபுச்சுன் பள்­ளி­யு­ட­னான உட்­லண்ட்ஸ் ரிங் உயர்­நி­லைப் பள்­ளி­யின் இணைப்­பும் ஓராண்­டுக்கு பின்­னர் தள்­ளிப்­போ­டப்­பட்­டுள்­ளது. ஜன­வரி 2025ஆம் ஆண்டு தற்­பொ­ழுது நடை­பெற உள்ள இந்த இணைப்பு, மாண­வர்­க­ளுக்­கும் பள்ளி ஊழி­யர்­க­ளுக்­கும் சிர­மத்தை குறைக்­கும் நோக்­கில் எடுக்­கப்­பட்­ட­தாக விளக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், 2022 ஆண்டு தொடங்கி 2023ஆம் ஆண்­டு­வரை மேம்­பாட்­டுப் பணி­கள் நடக்­க­வுள்ள ஹாய் சிங் உயர்­நி­லைப் பள்­ளி­யின் தற்­கா­லிக வளா­கத்தை தயார் செய்ய கூடு­தல் கால அவ­கா­சம் தேைவப்­ப­டு­வ­தால் அதன் தற்­கா­லிக வளா­கம் 2023ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்­தில்­தான் தயா­ரா­கும் என்று சொல்­லப்­ப­டு­கிறது.

இந்­தப் பள்­ளி­யின் நிரந்­தர வளா­கம் 2025ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் தயா­ரா­கி­வி­டும் என்று தற்­பொ­ழுது அமைச்சு கூறி­யுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!