இணைப்பு மீள்திறனை மேம்படுத்த மின்னிலக்கப் பொருளியல் திட்டங்கள்

இணைப்பு மீள்திறனை மேம்படுத்த மின்னிலக்கப் பொருளியல் திட்டங்கள்

1 mins read
c7fb0dda-4431-4d11-a80a-438c81ea54eb
-

புவி­சார்ந்த சவால்­க­ளை­யும் விநி­யோ­கம் தொடர்­பான சவால்­க­ளை­யும் முறி­ய­டித்து ஒன்­றி­ணைந்த உல­க­ளா­வி­யப் பொரு­ளி­ய­லில் சிறப்­பா­கச் செயல்­படும் அரிய வாய்ப்பு சிங்­கப்­பூ­ருக்கு இருப்­ப­தாக கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­துள்­ளார்.

தொடர்ந்து வெற்­றி­நடை போட வேண்­டு­மென்­றால் சிங்­கப்­பூர் அதன் இயற்கை வளங்­க­ளையோ மக்­கள்தொகையையோ சார்ந்­

தி­ருக்க முடி­யாது என்­றார் அவர்.

எனவே, வழக்­க­மான தடை­யற்­ற ஒப்­பந்­தங்­க­ளை­யும் கடந்து, புதிய மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் திட்­டங்­களை சிங்­கப்­பூர் மேம்­ப­டுத்தி வரு­வ­தாக திரு சான் கூறி­னார்.

மற்ற நாடு­க­ளு­ட­னான இணைப்பை அதி­க­ரிக்­க­வும் விதி­மு­றை­களை சீராக்­க­வும் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் திட்­டங்­கள் மேம்­ப­டுத்­தப்­ ப­டு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

இந்த மாற்றங்களுக்கிடையே, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உத்திபூர்வப் போட்டி தொடரும் என்றார் திரு சான்.

இந்த இரண்டு நாடுகளின் அணுகுமுறையை உலக நாடுகள் மிக அணுக்கமாகக் கண்காணிக்கும் என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.