தானியங்கி வாகனம் ஓட்டும் போட்டியில் பரிசுகளை அள்ளிய என்டியு குழு

தானியங்கி வாகனம் ஓட்டும் போட்டியில் பரிசுகளை அள்ளிய என்டியு குழு

1 mins read
77cdfea7-897a-40e4-8561-ae0983270696
முதல் பரிசு வென்ற என்டியு குழு. படம்: என்டியு -

அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த தானி­யங்கி வாக­னம் ஓட்­டும் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான 'வேமோ'­வின் ஏற்­பாட்­டில் நடை­பெற்ற போட்­டி­யில் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் (என்­டியு) இயந்­தி­ர­

ம­னி­த­வி­யல் குழு பரி­சு­களை

வென்­றுள்­ளது.

அடுத்த எட்டு வினா­டி­களில் தானியங்கி வாக­னம் எங்கு இருக்­கும் என்­பதை முன்­னு­ரைக்­கும் வழி­மு­றையை அக்­குழு கண்­டு

­பி­டித்­துள்­ளது.

இதற்­காக அக்­கு­ழு­வுக்கு இரண்டு விரு­து­கள் வழங்­கப்

பட்­டுள்­ளன.

இப்­போட்­டி­யில் உல­கின் சிறந்த பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளி­லி­ருந்து 70க்கும் மேற்­பட்ட குழுக்­கள் பங்­கெ­டுத்­தன.

அது­மட்­டு­மல்­லாது, அமெ­ரிக்­கா­வில் உள்ள 'சிலிங்ஸ்' எனப்­படும் செயற்கை நுண்­ண­றிவு நிறு­வ­ன­மும் சீனா­வைச் சேர்ந்த வாகன உற்­பத்தி நிறு­வ­ன­மான 'லீப்­மோட்­டாரும்' போட்­டி­யில் பங்­கெ­டுத்­தன.

போட்­டியை நடத்­திய 'வேமோ' நிறு­வ­னம் கூக­லின் துணை நிறு­

வ­னம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

உத­விப் பேரா­சி­ரி­யர் லியு சென், முனை­வர் பட்டக் கல்வி மாண­வர்­கள் மோ சியாவ்யு மற்­றும் ஹுவாங் சியு ஆகி­யோ­ரைக் கொண்ட என்­டியு குழு இரு­வழித் தொடர்பு முன்­

னு­ரைப்­புப் பிரி­வில் முதல் பரிசு வென்­ற­து.