உயர்கல்வியைத் தொடர உள்தறை அமைச்சுக் குழுவைச் சேர்ந்த 258 அதிகாரிகளுக்கு உபகாரச் சம்பளத்தையும் நிதி ஆதரவையும்
உள்துறை அமைச்சு வழங்கியுள்ளது. மேலும் 10 அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சின் புத்தகப் பரிசு வழங்கப்பட்டது.
உபகாரச் சம்பளம் வழங்கப்பட்ட அதிகாரிகளில் 30 வயது
பிரியாதனா கல்யாணசுந்தரமும் ஒருவர். இவர் சிங்கப்பூர் சிறைத்துறையில் உளவியல் நிபுணராகப் பணிபுரிகிறார்.
முதுகலைப் பட்டம் பெறுவதற்காக அவருக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி குமாரி பிரியாதனா லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி யில் மருத்துவத் தடயவியல் உளவியல் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பைப் பயில இருக்கிறார்.
போதைப்புழங்கிகளுக்கு
உளவியல் ரீதியான ஆதரவைத் தந்து அவர்கள் வாழ்வில் மாற்றத்தை காண்பதில் மகிழ்ச்சி அடையும் குமாரி பிரியாதனா, உளவியல் துறையில் கூடுதல் திறன் பெற உள்துறை அமைச்சு வழங்கியுள்ள உபகாரச் சம்பளம் வழிவகுத்திருப்
பதாகக் கூறினார்.
குமாரி பிரியாதனா கல்யாணசுந்தரம்.
படம்: உள்துறை அமைச்சு

