மரண தண்டனையிலிருந்து தப்பிய முருகன்; 12 ஆண்டு சிறைத் தண்டனை

மரண தண்டனையிலிருந்து தப்பிய முருகன்; 12 ஆண்டு சிறைத் தண்டனை

2 mins read
b98bf199-7475-4115-80dd-10e44f9caa77
-

சிங்­கப்­பூ­ருக்­குள் போதைப்­பொ­ருள் கடத்­திய குற்­றத்­துக்­காக மலே­சி­ய­ரான எஸ்.கே. முரு­கன் சுப்­பி­ர­ம­ணி­யத்­துக்கு முத­லில் மரண

தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்­மு­றை­யீடு செய்­ததை அடுத்து, 2019ஆம் ஆண்­டில் அது­கு­றித்து மீண்­டும் வழக்கு விசா­ரணை

நடத்­தப்­பட்­டது.

அதில் அவ­ரது மரண தண்­டனை ரத்து செய்­யப்­பட்டு அவ­ருக்கு 12 ஆண்டு சிறைத்

தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இந்நிலையில் வாக்குமூலங்களை அனுமதிப்பதன் தொடர்பில் தனி விசாரணை நடத்தப்பட்டது. முரு­க­னுக்கு எதி­ரான குற்­றச்­சாட்டை அர­சாங்க வழக்­க­றி­ஞர்­கள் திருத்­தி­யதை அடுத்து, அவ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­ப­டாது என்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

கைதான பிறகு விசா­ர­ணை­யின்­போது முரு­கன் அளித்த வாக்­கு­மூ­லம் அவ­ருக்கு எதி­ரா­கப் பயன்­

ப­டுத்­து­வது குறித்து அர­சாங்க வழக்­க­றி­ஞர்­களும் தற்­காப்பு வழக்­

க­றி­ஞர்­களும் வாதிட்­ட­னர். இதற்­காக மட்­டுமே 37 நாட்­க­ளுக்கு வழக்கு விசா­ரணை நீண்­டது.

முரு­கன் அளித்த ஏழு வாக்­கு­மூ­லங்­களை அவ­ருக்கு எதி­ரா­கப் பயன்­ப­டுத்த முடி­யாது என்று இம்­மா­த தொடக்­கத்­தில் நீதி­பதி சான் செங் ஓன் தெரி­வித்­தார்.

அந்த வாக்­கு­மூ­லங்­களை அவர் சுயமாக முன்வந்து தந்­தார் என்­பதை அதி­கா­ரி­க­ளால் நிரூ­பிக்க முடி­ய­வில்லை என்­றார் நீதி­பதி சான்.

50 வயது முரு­க­னுக்கு எதி­ராக குற்­றச்­சாட்டு திருத்­தப்­பட்டு அவ­ருக்கு இம்­மா­தம் 16ஆம் தேதி­யன்று 12 ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. 9 கிராம் டய­மோர்­பி­னைக் கடத்­தி­ய­தாக முரு­கன் ஒப்­புக்­கொண்­ட­தற்கு இந்­தத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

முரு­க­னின் தண்­ட­னைக்­கா­லம் அவர் தடுப்­புக் காவ­லில் முதன்­மு­த­லாக வைக்­கப்­பட்ட 2015ஆம் ஆண்டு ஜன­வரி 5ஆம் தேதி­யி­லி­ருந்து தொடங்­கு­வ­தாக எடுத்­துக்­கொள்­ளப்­படும் எனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது

2018ஆம் ஆண்­டில் கிரீன்­விச் டிரை­வில் முரு­கன் தமது சரக்கு லாரியை நிறுத்­தி­வைத்­தி­ருந்­த­தா­க­வும் அதில் முகம்­மது ஹிஷாம் முகம்­மது ஹர­ஃபின் ஏறிக்­கொண்­ட­தா­க­வும் முரு­கனைக் கைது செய்த அதி­கா­ரி­கள் தெரி­வித்­தி­ருந்­த­னர். அந்த இடத்தை மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் ஏற்­கெ­னவே கண்­கா­ணித்­துக் கொண்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. கைது செய்­யப்­பட்ட ஹிஷாம் அதே நாளில் கடு­மை­யான ஆஸ்துமா பாதிப்பு ஏற்­பட்டு மர­ண­ம் அடைந்­தார்.

லாரிக்­குள் வரு­வ­தற்­கு முன்பே 2.5 கிலோ போதைப்­பொ­ருளை ஹிஷாம் வைத்­தி­ருந்­த­தாக முரு­க­னைப் பிர­தி­நி­தித்த வழக்­க­றி­ஞர்­கள் வாதிட்­ட­னர்.