வெளிநாட்டு ஊழியர்களிடையே தடுப்பூசி விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது என்றும் அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று (ஜூலை 27) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளைத் தளர்த்துவது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார்.
எனினும், சமூக அளவில் கிருமித்தொற்று அதிகரித்துள்ள வேளையில், தங்குவிடுதிகளைவிட்டு வெளிநாட்டு ஊழியர்கள் வெளியே சென்றால் அவர்களைக் கிருமி தொற்றிவிடக்கூடும் என்ற கவலை இருப்பதாகக் கூறிய திரு வோங், அவர்களுக்கான கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் என்ற விவரத்தைக் குறிப்பிடவில்லை.

