மாணவர்கள், ஆசிரியர்கள் 540 பேர் உதவி கோரினர்

மாணவர்கள், ஆசிரியர்கள் 540 பேர் உதவி கோரினர்

2 mins read
6645f9fe-3c0b-4e3e-ad25-529de3dd9a9b
-

ரிவர் வேலி உயர்­நி­லைப் பள்­ளி­யில் நிகழ்ந்த கொலைக்குப் பிறகு அங்­குள்ள 540 ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் மன­நல உதவி கோரி­யதாக கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

மன­நல முத­லு­தவி, அதிர்ச்­சி­யைச் சமா­ளித்­தல் ஆகி­ய­வற்­றில் பயிற்­சி­பெற்ற கல்வி அமைச்­சின் 98 நிபு­ணர்­கள் பள்­ளிக்கு கூடு­தல் உதவி அளித்­தனர்.

அத்­து­டன், சம்­ப­வம் நிகழ்ந்த மறு­நா­ளன்று உட­னடி உத­வி நாடி பள்­ளிக்கு வரும் ஊழி­யர்­களுக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் உதவ 'கேர்' எனும் அவ­சர மன­ந­ல­ உதவி நிலை­யம் அமைக்­கப்­பட்­டது.

அந்நிகழ்வு ரிவர் வேலி உயர் நிலைப் பள்­ளியைத் தாண்டி வெளி­யி­லும் பெரிய தாக்­கத்தை ஏற்­படுத்­தி­யது. அத­னால் ஜூலை 20ஆம் தேதி, தாமும் கல்வி அமைச்­சின் முக்­கிய அதி­கா­ரி­கள் சில­ரும் தொடக்­கப் பள்ளி­கள் முதல் தொடக்­கக் கல்­லூ­ரி­கள் வரையிலான 350 பள்ளிகளின் முதல்­வர்­களைச் சந்தித்ததாக திரு சான் கூறினார்.

மனஅழுத்­தத்­தோடு காணப்­படும் மாண­வர்­க­ளும் ஊழி­யர் களும் தேவை­யான வளங்­களைப் பெறுவதற்கான வழி­கள் அவர்­க­ளு­டன் பகிர்ந்துகொள்­ளப்­பட்­டன.

21ஆம் தேதி பள்ளி மீண்டும் திறந்­த­போது, பள்­ளிக்கு வராத மாண­வர்­களை ஆசி­ரி­யர்­கள் தொடர்பு­கொண்டு நலம் விசா­ரித்­த­னர்.

தேவையானவர்களுக்கு விடுப்பு வழங்­கப்­பட்­டது. தங்­களது உணர்­வு­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளும்படி பள்­ளிக்கு வந்த மாண­வர்­களை ஆசி­ரி­யர்­கள் ஊக்கு­வித்­த­னர்.

"முக்­கி­ய­மாக, மாண­வர்­கள் முன்வந்து சிறிய செயல்கள் மூலம் பரிவைக் காட்­டியது, மகிழ்ச்சி அளித்­தது," என்­றார் திரு சான்.

அத்­து­டன், பள்ளி ஆலோ­சனைக் குழு, பெற்­றோர், முன்­னாள் மாண­வர்­கள் ஆகி­யோர் பள்­ளிக்கு ஆத­ரவு அளித்­த­தாக அவர் கூறினார்.