பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடும்படி குடும்பங்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

2 mins read
17bb978b-1013-458c-afb9-4e1ba3bfa934
-

ரிவர்­ வேலி உயர்­நி­லைப் பள்­ளி­யில் மாண­வர் கொலை­யுண்­டது போன்ற துயர நிகழ்­வு­கள் மீண்­டும் நிக­ழா­மல் தடுக்க பரந்த சமூக அள­விலான முயற்சி தேவைப்­ப­டு­கிறது என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் கூறி­யுள்­ளார்.

அனை­வர்க்­கு­மான, குறிப்­பாக இளை­யர்­க­ளுக்­கான சமூ­கப் பாது­காப்­புக் கட்­ட­மைப்பு தேவைப்­ப­டு­வதாக திரு சான் குறிப்­பிட்­டார். முதற்­கட்­ட­மாக, தங்­க­ளது சமு­தாய வட்­டங்­க­ளுக்­குள் உதவி தேவைப்­படு­வோரை அடை­யா­ளம் கண்டு, உதவும்படி பொது­மக்­களை அவர் ஊக்­கு­வித்­துள்­ளார்.

"உத­விக்­க­ரம் நீட்­டு­வது வலி­மைக்­கான அறி­கு­றி­தானே ஒழிய, அது பல­வீ­ன­மல்ல," என்­றார் அமைச்­சர்.

மாண­வர்­கள், பணி­யா­ளர்­கள், பெற்­றோர் அல்­லது குடும்­பத்­தி­னர் என உதவி கோரி எவர் வந்­தா­லும் அவர்­களை இகழ வேண்­டாம் என்­றும் பொது­மக்­க­ளுக்கு அவர் வேண்டு­கோள் விடுத்­துள்­ளார்.

"இந்த நிகழ்­வின்­மூ­லம், நமது தடை­களை அகற்­ற­வும் தடு­மா­று­வோ­ரில் உதவி கோரி முன்­வ­ரு­வோரை அக்­க­றை­யு­ட­னும் கரு­ணை­யு­ட­னும் நடத்­த­வும் நம்மை நாமே ஊக்­கு­வித்­துக் கொள்­வோம்," என்று திரு சான் கூறி­னார்.

பிள்­ளை­க­ளின் எண்­ணங்­களை, உணர்­வு­க­ளைச் செவி­ம­டுக்க கூடு­தல் நேரம் ஒதுக்­கு­மா­றும், அவர்­கள் தங்­க­ளுக்கு எது அழுத்­தம் தரு­கிறது என்­ப­தை­யும் தங்­க­ளது உணர்ச்­சி­க­ளை­க­யும் பகிர்ந்­து­கொள்­வ­தற்­கான வெளியை ஏற்­படுத்­தித் தரு­மா­றும் குடும்­பங்­களை அமைச்­சர் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

ஒரு பெற்­றோ­ரா­கத் தமது சொந்த அனு­ப­வத்­தைப் பகிர்ந்­து­கொண்ட அவர், "வெற்­றியை வரை­ய­றுக்க, நம் பிள்­ளை­க­ளு­ட­னும் குடும்­பத்­தி­ன­ரு­ட­னும் மிக வெளிப்­ப­டை­யான உரை­யா­டல்­களைக் கொண்­டி­ருக்க வேண்­டும்.குழந்­தை­கள் தங்­க­ளது ஆற்­றலை உணர்ந்­து­கொள்­ளச் செய்­ய­வும் அவர்­க­ளின் திறன்­களை வளர்க்­க­வும் அவர்­கள் தன்­னம்­பிக்­கை­யு­டன் இருக்­கவும் உத­வு­வ­தன் மூலமே வெற்­றியை வரை­யறை செய்ய வேண்­டும் என்­பதை ஒரு பெற்­றோ­ராக நான் உணர்ந்­துள்­ளேன்," என்­றார்.

தங்­க­ளுக்­கான வழி­யைக் கண்­டறி­வ­தற்­கான நம்­பிக்­கையை அளிப்­ப­து­தான் குழந்­தை­க­ளுக்­குப் பெற்­றோர்­கள் தரும் ஆகச் சிறந்த உறு­தி­மொ­ழி­யாக இருக்­கும் என்று திரு சான் குறிப்­பிட்­டார்.

மற்­ற­வர்­க­ளுக்­காக எழுந்து நின்று, கனி­வு­ட­னும் கரு­ணை­யு­ட­னும் அணு­கு­வ­தன்­மூ­லம் எதிர்­மறைத்­தன்­மை­யின் தீய சுழற்­சி­களைத் தகர்க்­கும்­படி பொது­மக்­களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்­துள்­ளார்.

"இணை­யத்­தில் நஞ்சை விதைக்­கும் உரை­யா­டல்­களை நிறுத்தி, வலி­மையை, அக்­க­றையை, நேர்­மறைத்­தன்­மை­யைப் பரப்­பும் செய்தி­களை நமது இணை­யத் தொடர்பு­கள்­மூ­லம் பெருக்க வேண்­டும்," என்­றார் அவர்.

பெற்­றோர் ஆத­ர­வுக் குழுக்­கள் மூல­மாக பெற்­றோர்­க­ளு­ட­னான பங்­கா­ளித்­து­வத்­தைக் கல்வி அமைச்சு வலுப்­ப­டுத்­தும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

அத்­து­டன், மாண­வர்­க­ளின், குடும்­பத்­தி­ன­ரின் மன­ந­லன்­மீது கவ­னம் செலுத்த அக்­கு­ழுக்­க­ளுக்­குள் கிளைக்கு­ழுக்­களை ஏற்­ப­டுத்த முடி­யும் என்­றும் அவர் சொன்­னார்.

இத­னி­டையே, பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­கள் உட்­பட பள்­ளிச் சமூ­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தைக் கல்வி அமைச்சு தொட­ரும். மற்ற பள்ளி மாண­வர்­க­ளின் நல்­வாழ்­வை­யும் அமைச்சு தொடர்ந்து கண்­காணிக்­கும்.

மன­நல, நல்­வாழ்­வுப் பிரச்­சினை­க­ளுக்­குத் தீர்­வு­கா­ணும் நோக்­கில் அனைத்­தை­யும் உள்­ள­டக்­கிய ஒரு திட்­டத்­தைத் தீட்­டு­வ­தற்­காக சுகா­தார அமைச்­சும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சும் இணைந்து ஒரு பணிக்­கு­ழுவை ஏற்­ப­டுத்தி இருப்­ப­தா­க­வும் அமைச்­சர் சான் கூறி­னார்.