கல்வி அமைச்சு: 'பிசிஆர்' பரிசோதனை முடிவு தேவை

கல்வி அமைச்சு: 'பிசிஆர்' பரிசோதனை முடிவு தேவை

1 mins read
4a2c95c5-e680-42c5-ba85-aff0434782ce
-

மாண­வர்­கள், பள்­ளிப் பணி­யா­ளர்­கள் ஆகி­யோ­ருக்­கு சுகா­தார ஆபத்து எச்­ச­ரிக்­கை­க­ளைச் சுகா­தார அமைச்சு விடுத்­தி­ருந்­தால், ஒப்­பு­தல் வழங்­கப்­பட்ட விடுப்­பில் அவர்­கள் வைக்­கப்­ப­டு­வர். 'பிசி­ஆர்' பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொண்டு அதில் அவர்­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று இல்லை என்று உறு­தி­யான பின்­னரே பள்­ளிக்கு அவர்­கள் திரும்ப முடி­யும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மாண­வர்­க­ளைப் பொறுத்­த­வரை­யில், ஒரே வீட்­டில் இருக்­கும் நப­ருக்கு இத்­த­கைய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருப்­பின், அந்த நபர் செய்­து­கொண்ட 'பிசி­ஆர்' பரி­சோ­தனை முடி­வில் கிருமி பாதிப்பு இல்லை என்று உறு­தி­யா­கும் வரை அம்­மா­ண­வர் விடுப்­பில் இருப்­பார்.

கொவிட்-19 நோயா­ளி­யு­டன் தொடர்­பில் இருந்­தி­ருந்­தால் அல்­லது கூடு­தல் ஆபத்துள்ள இடத்­திற்கு கொவிட்-19 நோயாளி சென்ற அதே நாளன்று சென்­றி­ருந்­தால் சுகா­தார ஆபத்து எச்­சரிக்­கை­கள் விடுக்­கப்­படும் என்று சுகா­தார அமைச்­சின் இணை­யத்­தளத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

எச்­ச­ரிக்கை கிடைத்­ததை அடுத்து செய்­து­கொள்­ளும் முதல் 'பிசி­ஆர்' பரி­சோ­த­னை­யில் கிரு­மித்­தொற்று இல்லை என்ற உறுதி கிடைக்­கும்­வரை ஒரு­வர் தம்­மைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

இதை­ய­டுத்து, குறிப்­பிட்ட சில பரி­சோ­தனை நிலை­யங்­க­ளுக்­குச் சென்று மீண்­டும் ஒரு 'பிசி­ஆர்' பரி­சோ­த­னை­யைச் செய்து, கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை மறு­உ­று­திப்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டும்.

ஜூரோங் மீன்­பி­டித் துறை­முகம், கேடிவி மன­ம­கிழ்க் கூடங்­கள் ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் பெரி­யள­வி­லான கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் உரு­வா­கி­யுள்ள நிலை­யில், இது­வரை பள்ளி சார்ந்த கிரு­மித்­தொற்­றுப் பர­வல் ஏதும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிய வந்­துள்­ளது.

கடந்த சில வாரங்­களில் குறைந்­தது 11 பள்­ளி­களில் கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வாகி­யுள்­ளன.