உணவு விநியோகத் தடைக்கு மாற்று ஏற்பாடு குறித்து அமைச்சர் கிரேஸ் ஃபூ

2 mins read
4cd1cf3c-c547-4882-a1b1-aaf157329006
-

சிங்­கப்­பூ­ரின் உணவு விநி­யோ­கத் தொட­ரில் தடை ஏற்­ப­டின், தற்­காலிக மாற்று விநி­யோ­கத் தள­மாக முன்­னாள் பாசிர் பாஞ்­சாங் விநி­யோக நிலை­யம் அமை­ய­லாம்.

தற்­போது 151 பாசிர் பாஞ்­சாங் ரோட்­டில் காலி­யாக இருக்­கும் அந்த இடத்­துக்கு நேற்று சென்­றி­ருந்த நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ இதனை அறி­வித்­தார்.

நாட்­டில் ஆங்­காங்கே உரு­வாகி வரும் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­க­ளால் சிங்­கப்­பூ­ரின் மீன்­பி­டித் துறை­மு­கங்­கள், விநி­யோக நிலை­யங்­க­ளின் செயல்­பாடு­களில் தற்­கா­லி­கத் தடை­கள் ஏற்­படும் நிலையை அவர் சுட்­டி­னார். ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­க­மும் இந்­தக் கார­ணத்­தி­னால் இம்­மா­தம் 17ஆம் தேதி­யன்று மூடப்­பட வேண்­டி­யி­ருந்­தது. அதை­ய­டுத்து மக்­கள் ஈரச்­சந்­தை­க­ளுக்கு விரைந்து, அங்­கி­ருந்த மீன்­களை வாரிக்­கொண்­ட­னர். மீன் கடை­களில் மீன்­கள் விரை­வில் விற்­றுத் தீர்ந்து கடை­கள் வழக்­கத்­தை­விட முன்­ன­தாகவே மூடி­விட்­டன.

"நம் உணவு விநி­யோ­கத் தொட­ரில், நமது மீன்­பி­டித் துறை­மு­கங்­களும் பாசிர் பாஞ்­சாங் மொத்த வியா­பார நிலை­ய­மும் முக்­கிய மையங்­க­ளா­கும். மீனுக்கு மீன்­பி­டித் துறை­மு­கங்­களும் காய்­கறி, பழங்­களுக்கு பாசிர் பாஞ்­சாங் மொத்த வியா­பார நிலை­ய­மும் உள்­ளன," என்று குறிப்­பிட்­டார் அமைச்­சர் ஃபூ. மிகக் குறு­கிய காலத்­தில் உட­ன­டி­யா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் வச­தி­யாக, தற்­போது காலி­யாக உள்ள முன்­னாள் பாசிர் பாஞ்­சாங் விநி­யோக நிலை­யம் உள்­ளது என சிங்­கப்­பூர் உணவு அமைப்பு குறிப்­பிட்­டுள்­ள­தை­யும் பகிர்ந்­து­கொண்­டார்.

காலி இடத்­தில் அமைந்­துள்ள கிடங்­கில் பொருட்­களை ஏற்­ற­வும் இறக்­க­வும் இட­வ­சதி உள்­ளது. அத­னால் தள­வாட நட­வ­டிக்­கை­களுக்கு அவ்­வி­டம் ஏற்­றது. மேலும் பெரிய அள­வி­லான வாகன நிறுத்து­மி­டங்­களும் கிடங்­கைச் சுற்றி உள்­ளன. ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கத்­துக்கு ஒப்ப, கிட்­டத்­தட்ட ஏழு காற்­பந்­துத் திடல்­க­ளுக்­குச் சம­மாக அந்த காலி இடம் விளங்­கு­கிறது.

"கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­களும் தனிமை உத்­த­ர­வு­களும் நம் விநி­யோ­கத் தொடர் நட­வ­டிக்­கை­களைப் பாதித்­தா­லும் நமது விநி­யோ­கத் தொடர், மீள்­தி­ற­னு­டன் செயல்­ப­டு­வதை இது உறு­தி­செய்­யும். உண­வுத் துறைக்கு ஆத­ர­வளிக்க நாங்கள் எந்­நே­ர­மும் தயார். சிங்­கப்­பூ­ரர்­க­ளின் தேவை­க­ளைத் தொடர்ந்து உணவு விநி­யோ­கம் வழி எங்­க­ளால் பூர்த்தி செய்யமுடி­யும்," என்­றார் திரு­வாட்டி ஃபூ.