உள்ளூரில் மேலும் 136 பேருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. அவர்களில் 36 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுகக் குழுமத்துடன் தொடர்பு உடையவர்கள். இத்துடன் அக்குழுமத்தில் கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 894ஆக உயர்ந்துள்ளது. கேடிவி குழுமத்தில் மேலும் இருவர் கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட, அக்குழுமத்தில் இதுவரை மொத்தம் 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூரில் புதிதாக பாதிக்கப் பட்டவர்களில் 59 பேர் ஏற்கெனவே கிருமி தொற்றியோருடன் தொடர்பில் இருந்தவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப் பட்டுவிட்டனர். கண்காணிப்பு பரிசோதனைகள் மூலம் மேலும் 22 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்பு கண்டறியப்படாத 55 பேர் புதிய எண்ணிக்கையில் அடங்குவர். வெளிநாட்டில் இருந்து வந்த மூவருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.

