சிங்கப்பூர்-இலங்கை அரசதந்திர உறவின் 50ஆம் ஆண்டு நிறைவு: அஞ்சல்தலைகள் வெளியீடு

சிங்­கப்­பூ­ருக்­கும் இலங்­கைக்­கும் இடை­யி­லான அர­ச­தந்­திர உற­வின் 50ஆம் ஆண்டு நிறை­வைக் குறிக்­கும் வகை­யில் இரண்டு சிறப்பு அஞ்­சல்­த­லை­கள் நேற்று வெளி­யிடப்­பட்­டன. இவ்­விரு நாடு­களும் தங்­க­ளுக்­கி­டை­யி­லான அர­ச­தந்­திர உறவை 1970ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி ஏற்­ப­டுத்­திக்­கொண்­டன. 50 ஆண்டு நிறைவு வர­லாற்று நிகழ்­வில் இலங்­கை­யின் வெளி­யுறவு அமைச்­சர் திரு தினேஷ் குண­வர்­த­னா­வும் சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கிருஷ்­ண­னும் மெய்­நி­கர் வழி கலந்து­கொண்­ட­னர்.

அந்த நிகழ்­வில் இரு அஞ்­சல்­தலை­கள் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. 'கடல்­துறை பாது­காப்பு' எனும் கருப்­பொ­ரு­ளில் உரு­வாக்­கப்­பட்ட இந்த அஞ்­சல்­தலை­கள் இலங்­கை­யில் உள்ள பவள சுற்­றுச்­சூ­ழல் அமைப்­பை­யும் சிங்­கப்­பூ­ரின் சதுப்­பு­நி­லங்­க­ளை­யும் பிர­தி­ப­லிப்­ப­தாக உள்­ளன.

இந்த மெய்­நி­கர் நிகழ்வு நடை­பெ­று­வ­தற்கு சில மணி நேரங்­களுக்கு முன், சிங்­கப்­பூர் ஷங்­ரிலா ஹோட்­ட­லில் சிங்­கப்­பூ­ருக்­கான இலங்­கைத் தூதர் திரு­மதி சஷி­கலா பிர­ம­வர்­த­னே­வும் இலங்­கைக்­கான சிங்­கப்­பூர் தூதர் திரு எஸ். சந்­தி­ர­தா­ஸும் சிறப்பு அஞ்­சல்­தலை­களை வெளி­யிட்­ட­னர்.

இந்த வர­லாற்று நிகழ்­வின் தொடர்­பில் இரண்டு அஞ்­சல்­த­லை­களை வெளி­யிட்ட சிங்­கப்­பூர் அர­சாங்­கம், சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு, தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம், சிங்­போஸ்ட், இலங்கை அஞ்­சல் துறை, சிங்­கப்­பூ­ரில் உள்ள இலங்­கைத் தூத­ர­கம் ஆகி­ய­வற்­றுக்கு தனது நன்­றி­யை­யும் வாழ்த்­து­க­ளை­யும் இலங்கை வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­துக் கொண்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!