ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டிஜன் துரித பரிசோதனைக் கருவி வழங்கப்படும்

ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டிஜன் துரித பரிசோதனைக் கருவி வழங்கப்படும்

1 mins read
e520522c-c17f-4393-af03-64fe30b13bdb
கொவிட்-19 சுவாசப் பரிசோதனையை நாடாளுமன்றஅமர்வுக்கு முன்னர் செய்து கொண்ட பிரதமர் லீ. படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

கொரோனா கிரு­மி­யு­டன் வாழப் பழ­கிக்­கொள்­ளும் முயற்­சி­யில் சிங்­கப்­பூர் அதன் பரி­சோ­த­னைத் திட்­டத்தை விரி­வு­ப­டுத்தி வரு­கிறது. இதற்­காக ஒவ்­வொரு வீட்­டுக்­கும் கொவிட்-19 சுய பரி­சோதனைக் கரு­வி­ கட்­டங்­கட்­ட­மாக வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்த ஆண்­டி­ஜன் விரைவு பரி­சோ­த­னைக் கரு­வி­கள் தற்­போது சில்­லறை வர்த்­த­கக் கடை­களில் கிடைக்­கின்­றன. அடுத்து, அர­சாங்­கம் கரு­வி­க­ளைக் குடி­மக்­க­ளுக்­கும் வழங்­கத் திட்­ட­மிட்டுள்­ளது.

பெருமள­வி­லான கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் உரு­வா­கி­யுள்ள வட்­டா­ரங்­களில் முத­லில் கரு­வி­கள் விநி­யோ­கம் செய்­யப்­படும் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று முன்­தி­னம் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

இந்தக் க­ரு­வி­க­ளு­டன் பரி­சோதனை செய்­வ­தற்­கான வேறு வழி­க­ளை­யும் சிங்­கப்­பூர் நடை­முறைப்­ப­டுத்­தும். சுவா­சப் பரி­சோதனை சாத­னம் அதில் ஒன்று. நாடா­ளு­மன்ற அமர்­வுக்கு முன்­னர் இத்­த­கைய சுவா­சப் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­படுவதை திரு வோங் உதாரணம் காட்டினார்.