அமைச்சர்: ஆண்டுக்கு சராசரியாக 960 கையூட்டு குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடந்துள்ளது

அமைச்சர்: ஆண்டுக்கு சராசரியாக 960 கையூட்டு குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடந்துள்ளது

1 mins read
2a1be84b-9350-43b5-bd9d-2a6e84c83e25
-

கையூட்­டுக் குற்­றம் தொடர்­பில் மனி­த­வள அமைச்சு, 2016க்கும் 2020க்கும் இடைப்­பட்ட காலத்­தில் ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக 960 சம்­ப­வங்­களை விசா­ரித்­த­தாக மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

இந்­தச் சம்­ப­வங்­களில் மூன்­றில் இரு பங்கு, வெளி­நாட்டு ஊழி­யர்­கள் புகார் அளித்­தவை என்­றும் எஞ்­சி­ய­வற்­றைப் பொது­மக்­கள் அல்­லது அர­சாங்க சார்­பற்ற அமைப்பு­கள், அர­சாங்க அமைப்­பு­கள் போன்­றவை புகார் அளித்­தவை என்­றும் டாக்­டர் டான் கூறி­னார்.

தர­வுப் பகுப்­பாய்­வின் அடிப்­படை­யில் மனி­த­வள அமைச்சு சுய­மாக மேற்­கொண்ட கண்­கா­ணிப்­புப் பணி­க­ளின்­போது ஒரு சில சம்­ப­வங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. வேலை பெற உத­வு­வ­தா­கக் கூறி, ஊழி­யர்­க­ளி­ட­மி­ருந்து கையூட்­டுப் பெறப்­பட்ட குற்­றம் புரி­யப்­பட்­டது.

ஓர் ஆண்­டில் செய்­யப்­படும் புகார்­களில் இத்­த­கைய கையூட்டு தொடர்­பா­னவை 10% என்று டாக்­டர் டான் குறிப்­பிட்­டார். நீ சூன் குழுத்­தொ­கு­தி­யின் திரு லூயிஸ் இங் கேட்ட கேள்­விக்கு டாக்­டர் டான் இவ்­வாறு பதி­ல­ளித்­தார்.

"தங்­க­ளின் முத­லா­ளி­கள் பழி­வாங்­கு­வார்­கள் என்று அஞ்­சா­மல் உடனே இது­போன்ற கையூட்­டுக் குற்­றங்­கள் குறித்து ஊழி­யர்­கள் புகார் அளிக்க முன்­வ­ரு­வதை மனி­த­வள அமைச்சு ஊக்­கு­விக்க, அவர்­க­ளுக்கு வேறு இடத்­தில் வேலை தேடி தரும் வச­தியை ஏற்­படுத்­திக் கொடுக்­கும்," என்­றார் அவர்.

கையூட்டு என்­றால் என்ன, நடை­மு­றை­யில் உள்ள ஊழி­யர் பாது­காப்பு, கடும் தண்­டனை மூலம் முத­லா­ளி­கள் குற்­றம் புரி­வ­தைத் தடுத்­தல் போன்­ற­வற்றை ஊழி­யர்­களுக்கு உணர்த்­து­வது அர­சாங்க அணு­கு­முறை என்­றார் அவர்.