டிரேஸ்டுகெதருக்கு முன்பே அதிர்வலைத் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய செங்காங் பொது மருத்துவமனை

டிரேஸ்டுகெதருக்கு முன்பே அதிர்வலைத் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய செங்காங் பொது மருத்துவமனை

1 mins read
8d7431f1-5fa8-47d5-8c10-c18c75f45dac
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று தலை­தூக்­கி­ய­தற்கு முன்பே பெரி­யம்மை, காச நோய் போன்ற தொற்­று­நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோரை அடை­யா­ளம் காண தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­திய அனு­ப­வம் செங்­காங் பொது மருத்­து­வ­ம­னைக்கு உள்­ளது.

டிரேஸ்­டு­கெ­தர் தொழில்­நுட்­பத்தை அர­சாங்­கம் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­தற்கு முன்பே அதிர்­வலை அடை­யாள தொழில்­நு­ட்பத்­தை­யும் ஒய்­ஃபை­யை­யும் செங்­காங் பொது மருத்­து­வ­மனை பயன்­ப­டுத்­தி­யது.

இந்­தத் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தி­ய­தன் மூலம் நோய்­வாய்ப்­பட்­ட­வர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோரை அடை­யா­ளம் காண எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட நேரத்தை மருத்­து­வ­மனை வெகு­வா­கக் குறைத்தது.

பொது­வாக செய்து முடிக்க பல மணி நேரம் எடுக்­கும் பணியை இந்த அதிர்­வ­லைத் தொழில்

நுட்­பத்­தால் மருத்­து­வ­மனை 10லிருந்து 20 நிமி­டங்­களில் செய்து முடித்­தது.

2018ஆம் ஆண்­டில் திறக்­கப்­பட்­ட­தற்கு முன்பே இந்த அணு­கு­மு­றைக்­கான திட்­டம் முன்­வைக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

"சார்ஸ் நோய்க்­குப் பிறகு வேறொரு தொற்­று­நோ­யால் பாதிப்பு ஏற்­படும் சாத்­தி­யம் உள்­ளது என்று எங்­க­ளுக்­குத் தெரி­யும்," என்று செங்­காங் பொது மருத்­து­வ­ம­னை­யின் உத்­தி­பூர்­வத் திட்­டப் பிரி­வுக்­கான இயக்­கு­நர் திரு­வாட்டி லீ புவே சுவான் தெரி­வித்­தார்.

2003ஆம் ஆண்­டில் வெறும் நான்கு மாதங்­களில் சார்ஸ் நோயால் பாதிக்­கப்­பட்டு சிங்­கப்­பூ­ரில் 33 பேர் உயி­ரி­ழந்­த­னர்.