நெக்ஸ், சன் பிளாசாவில் டிரேஸ்டுகெதர் கருவிகளை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரங்கள்

நெக்ஸ், சன் பிளாசாவில் டிரேஸ்டுகெதர் கருவிகளை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரங்கள்

2 mins read
d057750c-1482-46b2-b880-a41219edd55d
-

நெக்ஸ், சன் பிளாசா ஆகிய கடைத்­தொ­கு­தி­களில் டுரேஸ்­டு­கெ­தர் கரு­வி­களை விநி­யோ­கிக்­கும் தானி­யங்கி இயந்­தி­ரங்­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன.

அடுத்த சில மாதங்­களில் இவை போன்று 100க்கும் மேற்­பட்ட தானி­யங்கி இயந்­தி­ரங்­கள் சமூக நிலை­யங்­க­ளி­லும் குறிப்­பிட்ட சில கடைத்­தொ­கு­தி­க­ளி­லும் வைக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­வும் பழு­த­டைந்த டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­களை மாற்­றிக்­கொள்­ள­வும் இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறி­வார்ந்த தேசம், மின்­னி­லக்க அர­சாங்­கக் குழு நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

கொவிட்-19 சூழ­லில் பாதிக்­கப்­பட்­டோரை அடை­யா­ளம் காண இந்த டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

பொது இடங்­கள், அலு­வ­ல­கங்­கள், கடைத்­தொ­கு­தி­கள், பொது­மக்­கள் அதி­கம் இருக்­கும் இடங்­கள் ஆகி­ய­வற்­றுக்­குள் நுழை­வ­தற்கு முன்பு டிரேஸ்­டு­கெ­தர் கரு­வியை ஸ்கேன் செய்ய வேண்­டும்.

டிரேஸ்­டு­கெ­தர் கைபேசி செய­லிக்­குப் பதி­லாக இந்த டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­யைப் பயன்­ப­டுத்­த­லாம்.

ஒவ்­வொரு தானி­யங்கி இயந்­தி­ரத்­தி­லும் 1,400 டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­கள் வரை வைக்­கப்­பட்­டி­ருக்­கும்.

முதல்­மு­றை­யாக டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­யைப் பெற்­றுக்­கொள்­ப­வர்­கள் தானி­யங்கி இயந்­தி­ரத்­தி­லி­ருந்து அதைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாது.

டிரேஸ்­டு­கெ­தர் கருவி காணா­மல் போகும் பட்­சத்­தில் தானி­யங்கி இயந்­தி­ரத்­தி­லி­ருந்து மாற்று கரு­வி­யைப் பெற முடி­யாது.

நான்கு மாதங்­க­ளுக்­கும் குறை­வான டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­கள் பழு­த­டைந்­தா­லும் தானி­யங்கி இயந்­தி­ரங்­க­ளி­லி­ருந்து மாற்று கரு­வி­யைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாது.

இத்­த­கைய சூழ்­நிலை ஏற்­பட்­டால் சமூக மன்­றம் அல்­லது குறிப்­பிட்ட சில கடைத்­தொ­கு­தி­க­ளுக்­குச் சென்று புதிய கரு­வி­யைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டும்.

டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­க­ளைப் பெற வரு­வோ­ருக்கு உத­வ­வும் கருத்­து­கள் சேக­ரிக்­க­வும் தானி­யங்கி இயந்­தி­ரங்­கள் அரு­கில் அறி­வார்ந்த தேசத் தூதர்­கள் இருப்­பர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

தானியங்கி இயந்திரங்களிலிருந்து டிரேஸ்டுகெதர் கருவியை எடுக்க உதவும் அறிவார்ந்த தேசத் தூதர்கள்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்