மின்-சிகரெட்டுகளை இணையத்தில் சட்டவிரோதமாக விற்ற 13 பேர் மீது குற்றச்சாட்டு

மின்-சிகரெட்டுகளை இணையத்தில் சட்டவிரோதமாக விற்ற 13 பேர் மீது குற்றச்சாட்டு

1 mins read
26623acf-e0d8-480c-b6ee-d2c5056e0ce9
-

மின்-சிகரெட்டுகளையும் அவற்றின் பாகங்களையும் விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பதின்மூன்று பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.

மார்ச் முதல் ஜூன் வரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட அவர்களுக்கு மொத்தம் 164, 000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. மின் சிகரெட்டுகள், ஆவி வடிவில் நிக்கோட்டின் பொருளை மூச்சு வழியாக உள்வாங்க அதன் பயனீட்டாளர்களுக்கு வகை செய்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக உள்ளனர். இவர்கள் வெளிநாட்டு விநியோகிப்பாளர்களிடம் இருந்து இறக்குமதி செய்து இங்குள்ள சமூக ஊடகப் பக்கங்கள், இணைய வர்த்தகத் தளங்கள் ஆகியவற்றின் வாயிலாக விற்று வந்ததாக ஆணையம் கூறியது.

20 ,000 வெள்ளிக்கு மேற்பட்ட மதிப்புள்ள மின்-சிகரெட்டுகளும் தொடர்புடைய பாகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.